Saturday, June 16, 2012

கம்ப இராமயாணம் - வார்த்தை நயம்


கம்ப இராமயாணம் - வார்த்தை நயம்


கம்ப இராமயாணத்தில் வார்த்தை நயம் மிக்க பாடல்கள் நிறைய உண்டு. அதில் இருந்து ஒன்று.

கார் காலமும் முடிந்து விட்டது. சீதையை தேட ஆள் அனுப்புகிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து விட்டான்.

அவனுக்கு அதை நினைவு படுத்தி வருமாறு இலக்குவனிடம் இராமன் சொல்லி அனுப்புகிறான்.

அந்தப் பாடல்:

நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்,
அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய்.


நஞ்சம் = நஞ்சு போல்

அன்னவரை = குணம் உள்ளவரை (நஞ்சு உண்டவர்களை கொல்லும்)

நலிந்தால், = தண்டித்தால்

அது = அது

வஞ்சம் அன்று; = பழிக்குப் பழி வாங்கும் செயல் அன்று

மனு வழக்கு = அது மனு நீதியின் முறை ஆகும்

ஆதலால், = ஆதலால்

அஞ்சில், = அஞ்சில்

ஐம்பதில், = ஐம்பதில்

ஒன்று அறியாதவன் = ஒன்றும் அறியாத (சுக்ரீவன்)

நெஞ்சில் = மனதில்

நின்று நிலாவ, = பதியும் படி

நிறுத்துவாய். = நிலை நிறுத்துவாய்

இதில் என்ன வார்த்தை நயம் என்று கேட்கிறீர்களா?

அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன் என்ற சொற்றொடர்...

முதல் அர்த்தம் - அஞ்சில் + அம்பதில் + ஒன்று + அறியாதவன் = அஞ்சு வயதில், அம்பது வயதில் ஒன்றும் அறியாதவன் 

இரண்டாவது - அஞ்சு + இல் + அம்பு + அது + ஒன்று + அறியாதவன் = அஞ்சுதல் இல்லாத அம்புகள் என்னிடம் உள்ளன. அதில் ஒன்றை கூட அவன் அறியாதவன்

மூன்றாவது = அஞ் + சிலம்பதில் + ஒன்று + அறியாதவன் = அந்த மலையில் (சிலம்பு என்றால் மலை) உள்ள அவன் ஒன்றும் அறியாதவன்

நான்காவது = அஞ்சு + அம்பது + ஒன்று = 56 . அதாவது , 56 ஆவது வருடம் தந்துபி வருடம். இலக்குவன் தந்துபி என்ற அரக்கனின் எலும்பு கூட்டை கால் கட்டை விரலால் உந்தி தள்ளினான். அதை சுக்ரீவன் அறிந்தான் இல்லை. அதை அவன் நெஞ்சில் நின்று உலாவ நிறுத்துவாய்.

ஐந்தாவது = அஞ்சிலம் + பதில் + ஒன்று + அறியாதவன் = அச்சமும் இல்லை, எனக்கு தருவதற்கு ஒரு பதிலும் இல்லை, திரு திரு என்று முழிக்கும் அவன் ஒன்றும் அறியாதவன் 

எப்படி கம்பனின் வார்த்தை விளையாட்டு ?


 


6 comments:

  1. Wow...excellent..
    I heard about your blog Last week from Mr.N.Chokkan and you are doing a great job.
    Initial tamil illakkiyam readers like me can understand easily and enjoying it. I started recommending your blog to my friends.
    Thanks again.
    I want to read every poem in kamba ramayanam. Could you please suggest me a good book for that? I heard book from "Mare Rajam" publication is good.
    Please suggest good one.
    (I am learing tamil type writing now. next time i will post a comment in tamil.)

    - Jaya

    ReplyDelete
    Replies
    1. Vai.Mu. Gopalakrishnamacharyar's Urai for Kamaba Ramayanam is great. (in 7 volumes, I think).

      It may be hard and boring to read every poem in sequence unless you are doing some research.

      I have seen various books by authors like suki Sivanm, Abudhul Rahman, Ki.Vaa.Ja, Warrier Swamigal on Kamba Ramayanam more interesting.

      When you start reading, please share with us what you liked....all the best.

      Delete
    2. Many thanks. Sure. I will start reading as you suggested and share.

      Delete
  2. மிக நன்று. என்ன ஒரு வார்த்தை ஜாலம்! தந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  3. அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன் -கம்பனே இவ்வளவு அர்த்தம் நினைத்து இருப்பனோ என்று தெரிய வில்லை. SUPERB. THX.

    ReplyDelete
    Replies
    1. கம்பன் இன்னும் கூட நினைத்து இருப்பான்...நான் படித்து அறிந்து கொண்டது இவ்வளவு தான்...:)

      Delete