Monday, June 4, 2012

விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


விவேக சிந்தாமணி - பெண்களை நம்பாதே


தமிழ் இலக்கியம் ஆண் சார்ந்ததாகவே இருந்து வந்து இருக்கிறது.

மனைவியை சந்தேகித்த இராமனை இந்த நாடு கடவுள் என்றே போற்றுகிறது.

விலை மகள் பின்னால் போய், சொத்தை எல்லாம் அளித்த கோவலனை கோவிக்காமல் ஏற்றுக் கொண்ட கண்ணகியை கற்ப்புக்கு அரசி என்று கொண்டாடுகிறது தமிழ் கூறும் நல் உலகம்.

மனைவியை வைத்து சூதாடிய யுதிஷ்டிரன், தர்ம ராஜா

மனைவியை விற்ற அரிச்சந்திரன், சக்ரவர்த்தி

நாடு கானகத்தில் மனைவியின் சேலை தலைப்பை திருடிக்கொண்டு அவளை தவிக்க விட்டு சென்ற நளன், மகாராஜா

கவி பாட பாரதி, குனிந்து கும்மி அடிக்க நாங்கள் என்று பெண்கள் குரல் கொடுத்தாலும், ஆணாதிக்கம்தான் ஆல மரமாய் விரிந்து கிடக்கிறது தமிழ் இலக்கியம் எங்கும்.

பெண்களை தெய்வம் என்று போற்றிக் கொண்டே, அவர்களை கீழே தள்ளி எட்டி உதைக்கிறது இந்த சமூகம்....

விவேக சிந்தாமணி, பெண்களைப் பற்றி பேசுகிறது இங்கே....


ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் 
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம் 
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் 
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே!

எளிய பாடல் என்பதால் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் தரவில்லை. வேணுமா என்ன ?


12 comments:

  1. அர்த்தம் வேண்டாம். "தையல் சொல் கேளீர்" "பெண் புத்தி பின் புத்தி" ... என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்களே!

    ஆண்களின் குறைகளைப் பற்றி ஒன்றும் யாரும் எழுதவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஆண்களில் மூடர்கள், முரடர்கள், கயவர்கள் என்றெல்லாம் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நிறைய இருக்கிறது...

      Delete
  2. வேண்டாம் இந்த மாதிரி negative பாடல்கள். நல்ல பாடல்களை மட்டும் பார்ப்போம். கெட்டவைகள் தான் எங்கும் இறைந்து கிடக்கிறதே.

    ReplyDelete
    Replies
    1. நல்லதும் கெட்டதும், நாலும் தெரிஞ்சு இருக்கணும்.

      Delete
    2. Unmayathane சொல்றாங்க

      Delete
  3. it s wrongly understood by many as woman wearing saree. Sel agattiya means one who calls you thro eyes or ' a call girl'.

    ReplyDelete
  4. i listen its "sel akattiya matharai", who is remove her sarnies in front of others..cal girl

    ReplyDelete
  5. Ranganathan ParthasarathiNovember 17, 2022 at 7:24 PM

    சேலைகட்டிய மாதர்: சேல்+அகட்டிய
    சேல் என்றால் விழி.அதாவது விழிகளை அகட்டிய மாதர் என்று பொருள்படும்.நான் இதை சில வருடங்களுக்கு முன்பு இந்த விளக்கத்தை படித்திருக் கிறேன்.

    ReplyDelete