Saturday, June 23, 2012

திருக்குறள் - நமக்கு ஏன் துன்பம் வருகிறது?


திருக்குறள் - நமக்கு ஏன் துன்பம் வருகிறது?


நமக்கு ஏன் துன்பம் வருகிறது ? திருவள்ளுவர் சொல்கிறார் நம் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம் என்ன என்று.

நமக்கு வரும் துன்பத்திற்கு எல்லாம் காரணம் நாம் மற்றவர்களுக்கு செய்த துன்பம் தான்.

எனவே, நமக்கு துன்பம் வேண்டாம் என்றால், நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்யக்க் கூடாது.


நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

நோயெல்லாம் = துன்பம் எல்லாம்

நோய்செய்தார் மேலவாம் = துன்பம் செய்தவர்கள் மேல் வரும்

நோய்செய்யார் = (மற்றவர்களுக்கு) துன்பம் செய்ய மாட்டார்கள்

நோயின்மை வேண்டு பவர்.= தனக்கு துன்பம் வேண்டாதவர்கள்





No comments:

Post a Comment