Sunday, June 3, 2012

நள வெண்பா - சூடான நிலா


நள வெண்பா - சூடான நிலா 


காதலனை காணாமல் தவிக்கும் காதலிக்கு நிலவு குளிராது, சுடும் என்று நிறைய படித்து இருக்கிறோம்.

நளவெண்பா பாடிய புகழேந்தி புலவர் ஒரு படி மேலே போகிறார்.

அந்த கொதிக்கும் நிலாவினால், வானம் கொப்புளம் கொண்டது...அந்த கொப்புளம் தான் நட்சத்திரங்கள் என்று கூறுகிறார்.

என்ன ஒரு அருமையான கற்பனை.

செப்பிளங் கொங்கைமீர் திங்கட் சுடர்ப்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுதும்
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.

செப்பிளங் = குங்கமச் செப்பினை போன்ற இளைய 

கொங்கைமீர் = 

திங்கட் = நிலவின்

சுடர்ப்பட்டுக் = ஒளி பட்டு

கொப்புளங் = உடல் எல்லாம் கொப்புளங்களை

கொண்ட = கொண்ட

குளிர்வானை = குளிர்ந்த வானத்தை

இப்பொழுதும் = இப்போதும்

மீன்பொதிந்து = விண் மீன்கள் நிறைந்து

நின்ற = இருக்கின்ற

விசும்பு = வானம்

என்பது என் கொலோ = என்று கூறுவது ஏன் ?

தேன்பொதிந்த = தேன் நிறைந்த

வாயால் தெரிந்து. = (உங்கள்) வாயால் தெரிந்தே 


நிலவின் சூட்டினால் கொப்புளம் கொப்புளமாய் இருக்கும் வானத்தைப் பார்த்து,

அது எல்லாம் நட்ச்சத்திரம் என்று ஏன் இப்படி உங்கள் வாயால் பொய் சொல்கிறீர்கள்?

பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். கற்பனை, கவிதை அழகு, உவமை நேர்த்தி, எல்லாம் நிறைந்த இனிய தொகுதி.

வெண்பாவுக்கு ஒரு புலவன் புகழேந்தி என்று புகழ் பெற்றவர் அவர்.

நள வெண்பாவில் ஒவ்வொரு பாடலும் கற்கண்டு போல தித்திக்கும்.


(Appeals: Actually two appeals.

1. If you like this blog, please click g+1 button below to express your liking

2. If you like to read more selected songs from Nala Venpaa, please type "yes" in comments box and publish apart from your other comments...

Thanks)

4 comments: