Wednesday, June 6, 2012

கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?


கம்ப இராமாயணம் - அவதாரம் என்றால் என்ன ?

அவதாரம் என்றால் இறங்கி வருவது என்று பொருள். 

இறை நமக்காக இறங்கி வருவது அவதாரம்.

நம்மால் மேலே போக முடியாது. நம்மை ஏற்றி விட அவன் இறங்கி வர வேண்டும்.

இராமாயணம் பாடப் புகுந்த கம்பர், இராமனை இரு கை வேழம் என்கிறார் . 

ஏன் ? 

யானையின் குணம், தன் காலைப் பிடித்தவர்களை தலைக்கு மேல் தூக்கி விடுவது.

பாற்கடல் விட்டு இந்த மனித குலம் உய்ய மண் மீது வந்தது அந்த மன். 

எனவே இராமனை பற்றி சொல்ல வந்த கம்பர் "இரு கை வேழம்" என்றார்

இராமன் வந்ததின் நோக்கம் நம்மை மேலேற்றி விடுவது. எனவே "வேழம்"....


தருகை நீண்ட தயரதன்தான் தரும்
இரு கை வேழத்து இராகவன்தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட.
குருகை நாதன் குரை கழல் காப்பதே.

தருகை = தந்த கை, தருகின்ற கை, தரும் கை (வினைத்தொகை)

நீண்ட =நீண்ட, தரும் கையை கொண்ட

தயரதன்தான் தரும் = தசரதன் தந்த

இரு கை = இரண்டு கைகளை கொண்ட

வேழத்து = யானை போன்ற

இராகவன்தன் கதை = இராகவனின் கதையை

திருகை = சூழ்ந்த

வேலைத் = கடல்

தரைமிசைச் = இந்த பூமியில்

செப்பிட. = சொல்ல

குருகை நாதன் = நம்மாழ்வார்

குரை கழல் = சிறந்த கழல்

காப்பதே. = அதுவே காப்பு


1 comment:

  1. Does this poem appear at the beginning of KR?

    Interesting thing about the elephant. (But if the elephant is not trained, and you hug its foot, it would just trample you!)

    ReplyDelete