Saturday, June 23, 2012

நளவெண்பா - காமனை எரித்தது பொய்


நளவெண்பா - காமனை எரித்தது பொய்


புராணகள் எல்லாம் சிவன் காமனை எரித்ததாக சொல்கிறது.

தமயந்தி அதை நம்பவில்லை. காமன் எரிந்து போனது உண்மையானால், தான் இப்படி காதலில் கஷ்டப் பட வேண்டியது இருக்காதே என்று நினைக்கிறாள்.


கானும் தடங்காவும் காமன் படைவீடு
வானும்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெல்லாம் கோதண்ட சாலை
பொடியாடி கொன்றதெல்லாம் பொய்.

கானும் = கானகமும்

தடங்காவும் = பெரிய சோலைகளும்

காமன் படைவீடு = காமனின் படை வீடுகளாகும்

வானும் = இந்த வானம்

தேர் வீதி = அவனின் தேர் செல்லும் வீதி

மறிகடலும் = அலை பாயும் இந்த கடல்கள்

மீனக் கொடியாடை = அவனுடைய மீன் கொடி

வையமெல்லாம் = இந்த உலகம் எல்லாம்

கோதண்ட சாலை = அவனுடைய போர்க் களம்

பொடியாடி = (சாம்பல்) பொடியை உடலில் பூசி கொண்டு ஆடும் சிவன்

கொன்றதெல்லாம் பொய். = அவனை கண்ணால் எரித்து கொன்றதாக 
சொன்னது எல்லாம் பொய்

என்ன ஒரு அழகான பாடல்.




No comments:

Post a Comment