திருக்குறள் - வாழ்வது எப்போது ?
எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று சிந்தித்து கொண்டே இருப்பது அல்ல வாழ்கை.
வாழ்கை என்பது வாழ்வது.
நிறைய பேருக்கு பணம் சம்பாதிக்கத் தெரியும். அதை நல்ல வழியில் செலவழிக்கத் தெரியாது. நாளைக்கு வேண்டும் நாளைக்கு வேண்டும் என்று சேர்த்து வைத்துக் கொண்டே இருப்பார்க்கள்.
மனைவி மக்கள் எல்லோரும் இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து செலவழிக்க நேரம் இருக்காது. அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடுவார்கள்.
நல்ல புத்தகம், நல்ல இசை, நல்ல நண்பர்கள், (நல்ல blog !) இவற்றிற்கெல்லாம் நேரம் இருக்காது. ஏதோ கற்ப கோடி ஆண்டு வாழப் போவது போல் எதிர் கால கற்பனையில் நிகழ் காலத்தை வீணடித்துக் கொண்டு இருப்பார்கள்.
அவர்களை வள்ளுவர் வாழத் தெரியாதவர்கள் என்று கூறுகிறார்.
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
ஒரு பொழுதும் - எப்போதும் வாழ்வது என்ன என்று அறியாதவர்கள். ஒரு நிமிஷம் கூட வாழ அறியாதவர்கள்
கருதுப கோடியும் அல்ல பல - அவர்கள் நினைப்பது கொஞ்சம் அல்ல, கோடிக்கும் மேல். எப்படி சம்பாதிப்பது, அதை எங்கு முதலீடு செய்வது, செய்த முதலீட்டை எப்படி காப்பாற்றுவது, அதற்க்கு யார் துணையை நாடுவது, யார் எதிரி, யார் நண்பர்கள், இப்படி யோசித்து யோசித்து வாழ்க்கையை வாழாமல் யோசித்துக்கொண்டே ("கருதுப") இருப்பார்கள் என்கிறார்.
யோசித்தது போதும்...கொஞ்சம் வாழ்க்கையயை வாழ்வோம், வள்ளுவர் நெறி நின்று ....
நமக்காகவும் செலவு செய்து கொள்ளாமல், தானமும் செய்யாமல் அடுத்த தலைமுறைக்காக பாதுகாத்துக்கொண்டு watchman வேலை செய்து கொண்டு இருக்கோம் .
ReplyDeleteExactly. The next generation may not even want our money....
Deleteகோடியும் அல்ல பல - means: for them, even a crore is not many (i.e., even a crore is not enough). What could that "crore" mean? Not just money, but anything ... ?
ReplyDeleteNice Kural. I had not heard of this, and so very happy to discover this through this blog. Thanks for sharing.
Your interpretation is also interesting. I have not thought about like that. Navil thorum nool nayam polum....
ReplyDelete