திருவருட்பா - கண்ணேறு
இறைவா உன் திருவடி மிக மிக அழகாக இருக்கும்.
அதை பார்த்தால் அந்த அழகில் மயங்கி விடுவேன்.
அப்படி மயங்கி மனதை பறி கொடுத்து அந்த திருவடியில் மன லயித்து போனால், என் கண்ணே பட்டு விடும்.
அதனால் தான் நீ எனக்கு உன் திருவடியை கனவிலும் கூட காட்ட மறுக்கிறாயா என்று உருகுகிறார் வல்லாளர்
‘பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின்
கண்ணேறு படுமென்றோ கனவிலேனும்
காட்டென்றாற் காட்டுகிலாய் கருணையீதோ.
பண்ணேறு = பண் என்றால் இசை. பண் ஏறு = இசை ஏறிய, இசையுடன் கூடிய
மொழியடியார் = புலவர்கள், ஞானிகள்
பரவி வாழ்த்தும் = போற்றி, வாழ்த்தும்
பாதமலர் = உன்னுடைய மலர் போன்ற பாதத்தின்
அழகினையிப் பாவி = அழகினை + இப் + பாவி = அந்த பாதத்தின் அழகை இந்த பாவி
பார்க்கின் = பார்த்தால்
கண்ணேறு = கண்ணேறு
படுமென்றோ = படும் என்றோ
கனவிலேனும் = கனவில் கூட
காட்டென்றாற் = காட்டு என்றால்
காட்டுகிலாய் = காட்ட மறுக்கிறாய்
கருணையீதோ = இதுதானா உன் கருணை.
கண்ணால் காண முடியாத கடவுளைப் பற்றீ இப்படி ஊருகுவது வியப்புத்தான்.
ReplyDeleteஎம் அய்யன் வள்ளலார் உணர்ந்தவர். அதனால் உருகுகிறார்.
Delete