ஆசாரக் கோவை - ஒரு அறிமுகம்
வாழ்வில் கடை பிடித்து ஒழுக வேண்டிய நெறிமுறைகளை தொகுத்து தருகிறது ஆசாரக் கோவை.
இதை இதை செய்ய வேண்டும், இதை இதை செய்யக் கூடாது என்று பட்டியல் போட்டு தருகிறது.
சமஸ்க்ரிதத்தில் இது போன்ற நூல்களை ஸ்மிர்திகள் என்று சொல்வார்கள்.
இது தமிழில் உள்ள ஸ்ம்ருதி என்று சொல்லலாம். பல வட மொழி நூல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இந்த நூல்.
இதில் உள்ள பல வழி முறைகளை இன்று கடைபிடிக்க முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும், அறிந்து கொள்வது நல்லது தானே. முடிந்தவரை கடை பிடிக்காலாம்.
இதில் சொல்லப் பட்ட வழி முறைகளுக்கு ஆதாரம் ஏதும் இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நூல் எழுதிய ஆசிரியரே, "இது முன்னோர் சொன்னது"., "இது கற்று அறிந்தோர் சொன்னது", என்று குறிப்பிடுகிறார்.
பல பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கிறது.
முதல் பாடலிலேயே ஆசிரியர் நேராக விசயத்துக்கு வந்து விடுகிறார்.
எது ஆசாரத்துக்கு வித்து ? அடிப்படை என்று ஆரம்பிக்கிறார்:
எட்டு விதமான குணங்கள் ஆசாரத்திற்கு வித்து என்கிறார்:
அவையாவன:
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல்,-இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து.
நன்றி அறிதல், = நன்றி பாராட்டுதல். தனக்கு பிறர் செய்த நன்றியை மறவாமை
பொறையுடைமை, = பொறுமை
இன் சொல்லோடு, = இனிய சொல்
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, = மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமை
கல்வியோடு, = கல்வி அறிவு
ஒப்புரவு = ஒப்பு + உறவு = ஊரோடு ஒத்து வாழ்தல்
(ஆற்ற அறிதல், = செயல் திறம் )
அறிவுடைமை, = அறிவு
நல் இனத்தாரோடு நட்டல் = நல்லவர்களின் நட்பு
இவை எட்டும் = இந்த எட்டும்
சொல்லிய ஆசார வித்து. = ஆசாரத்திற்கு வித்து
இதில் "ஆற்ற அறிதல்" என்பது இதை எல்லாம் செய்யக் கூடிய திறமை என்று வருகிறது. அது அந்த எட்டில் ஒன்று இல்லை.
எவ்வளவு சிறப்பான விஷயம். இதை எல்லாம் நம் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே சொல்லி கொடுக்காமல் விட்டு விட்டோம்....
இந்த மாதிரி "பட்டியல்" போடும் பாட்டுக்களைப் படிக்கும்போதெல்லாம், "ஏன் இந்த எட்டு என்று முடிவு பண்ணினார், இன்னும் இரண்டு மூன்று சொன்னால் என்ன?" என்ற கேள்வி என் மனதில் எழாமல் இருப்பதில்லை.
ReplyDeleteஎப்படியோ, நல்ல பாடல்தான்.
நன்றி.
உங்கள் BLOG படிக்க படிக்க நம் குழந்தைகள் LIFEஐ அப்படியே REWIND செய்து இதை எல்லாம் படிக்க விடக்க வைக்க முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.
ReplyDeleteஆசாரக் கோவையிலிருந்து இன்னும் சில பாடல்களை எழுதுங்கள்.
தங்கள் சித்தம், என் பாக்கியம்...:)
Deletei feel guilty because in my childhood days i didn't feel serious about the moral life.....now am 44 years.....but cannot rewind my life so personally crying about myself.
Delete