Saturday, June 16, 2012

சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி


சரஸ்வதி அந்தாதி - கல்லும் சொல்லாதோ கவி


கம்பன் கவிதைகளை படிக்கும் போது, இப்படி கூட ஒரு மனிதனால் கவிதை எழுத முடியுமா என்று நாம் வியக்காமல் இருக்க முடியாது.


எப்படி தன்னால் எழுத முடிந்தது என்று அவரே கூறுகிறார்

கல்விக் கடவுளான சரஸ்வதியையை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவி சொல்லுமாம்.

படிக நிறமும் பவள செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போன்ற கையும் - துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி


படிக நிறமும் = படிக நிறமும்

பவள செவ்வாயும் = பவளம் போன்ற சிவந்த இதழ்களும்

கடி கமழ் = உயர்ந்த மனம் வீசும்

பூந்தாமரை போன்ற கையும் = மென்மையான தாமரை போன்ற கைகளும்

துடி இடையும் = சிறிய இடையும்

அல்லும் பகலும் = இரவும் பகலும்

அனவரதமும் = எல்லா நேரமும்

துதித்தால் = துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி = கல்லும் கவி சொல்லும்

-----------------------------------------------------------------------------------------------------------

General:

1. If you like this blog entry, please click g+1 button below. Just a click will do. Nothing to type.

2.  Each Blog entry has a list of key words in its labels section. If you click any of the key words, you will get all the blog entries in which that key word appears.

3. If you like to have read few more interesting songs from Sarawadhi Andhadhi, please type YES in the comments box and press publish button

9 comments: