மூதுரை - தீயார் உறவு
தீயவர்களைக் காண்பதும் தீதே - பார்த்தால் என்ன ஆகும் ? அட, இவன் இவ்வளவு தப்பு செய்கிறான், சட்டத்தை மீறுகிறான், அயோக்கியத்தனம் பண்ணுகிறான் இருந்தும் நல்லாதான் இருக்கான், ஒழுங்கா நேர்மையா இருந்து நாம என்னத கண்டோம், நல்லதுக்கு காலம் இல்லை...நாமும் கொஞ்சம் அப்படி செய்தால் என்ன என்று தோன்றும். கொஞ்சம் செய்வோம். மாட்டிக் கொள்ளவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் செய்யத் தோன்றும். இப்படிப் போய் கடைசியில் பெரிதாக ஏதாவது செய்து மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே, தீயவர்களை காணாமல் இருப்பதே நல்லது.
அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?
தீயார் சொல்லை கேட்பதும் தீதே....தீயதைக் கூட நல்லது மாதிரி சொல்லி நம்மை தீய வழியில் செலுத்தி விடுவார்கள். ஒரு தடவைதானே சும்மா முயற்சி செய்து பாருங்கள், பிடிக்கலேனா விட்டுருங்க என்று கேட்ட பழங்கங்களை நமக்கு அறிமுக படுத்தி விடுவார்கள்.
அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?
தீயார் குணங்களை ஊரைப்பதும் தீதே ...தீயவர்களின் குணங்களைப் பற்றி பேசக் கூட கூடாது. இன்றைய தினம் தொலைக் காட்சிகளிலும், தினசரி இதழ்களிலும் கொலை செய்தவன், கொள்ளை அடித்தவன், கற்பழித்தவன் , வெடி குண்டு வைத்தவன் ....இவர்கள் பற்றிய செய்திகள்தான் அதிகம் வருகிறது. அது கூடாது என்கிறார் அவ்வையார்
அவரோடு இணங்கி இருப்பதும் தீதே .... அவர்களோடு ஒன்றாக இருப்பதும் தீதே
அவர்களை கண்டு, அவர்களோடு பழகி அவர்களை திருத்த்துகிறேன் என்று நினைக்கலாமா ?
பாடல்
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
நீ விட மாட்டியே!
ReplyDelete