இராமாயணம் - வெட்கப்பட்ட திருமால்
சீதையை தேடி கண்டடைந்த அனுமன், அவளுக்கு தன் விஸ்வரூபத்தை காட்டுகிறான். அந்த உருவத்தை கம்பன் சில பாடல்களில் விவரிக்கிறான். அதில் ஒரு பாடல்...
"இதை ஒரு வலிமை இல்லாத குரங்கு என்று நினைக்க முடியாது. உலகுக்கோர் அச்சாணி போன்றவன் இந்த அனுமன். இவனுடைய பெருமை சொல்ல முடியாது. இவனுடைய விஸ்வரூபத்தைப் பார்த்தால், அந்த உலகளந்த திருமாலும் வெட்கப் படுவான் "
என்கிறார் கம்பர்.
பாடல்
‘ஏண் இலதுஒரு குரங்கு ஈது’ என்று எண்ணலா
ஆணியை, அனுமனை,அமைய நோக்குவான்,
‘சேண் உயர்பெருமை ஓர் திறத்தது அன்று’ எனா,
நாண் உறும்-உலகுஎலாம் அளந்த நாயகன்.
பொருள்
‘ஏண் இலது = வலிமை இல்லாதது
ஒரு குரங்கு ஈது’ என்று = ஒரு குரங்கு இது என்று
எண்ணலா = நினைக்க முடியாது
ஆணியை = உலகுக்கு அச்சாணி போன்றவனை
அனுமனை = அனுமனை
அமைய நோக்குவான் = முழுதும் நோக்குவான்
‘சேண் உயர் = ஆகாயம் அளவு உயர்ந்த
பெருமை ஓர் திறத்தது அன்று’ எனா, = பெருமை ஒரு சிறிது அன்று
நாண் உறும் = வெட்கப் படுவான்
உலகுஎலாம் அளந்த நாயகன் = உலகம் எல்லாம் அளந்த அந்த நாயகன்
No comments:
Post a Comment