Sunday, September 1, 2013

நன்னூல் - பாடம் பயிலும் முறை

நன்னூல் - பாடம் பயிலும் முறை 


எப்படி பாடம்  படிக்க வேண்டும் ?

பாடம் பயிலும் முறையை சொல்கிறது நன்னூல்


பாடல்

நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல்
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல்
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல்
அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்

பொருள்





நூல்பயில் இயல்பே = நூல் கற்றலின் இயல்பை

நுவலின் =  சொல்லுவது என்றால்

வழக்கு அறிதல் = வழக்கு இரண்டு வகைப் படும். ஒன்று உலக வழக்கு. அதாவது உலகம் இதுவரை எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறது  வழக்கு. இன்னொன்று, படிக்கும் புத்தகம் என்ன சொல்லுகிறது. இது இரண்டாவது வழக்கு. புத்தகம் உலக வழக்கோடு ஒத்துப்  போகலாம்.அல்லது அதை மறுத்து  புதிய கருத்தை  சொல்லலாம். கற்கும் மாணவன் இரண்டையும் அறிய வேண்டும்.


பாடம் போற்றல் = கேட்க்கும் பாடத்தை மதிக்க வேண்டும். அதில் உள்ள அறிவை, அதன் பின் உள்ள உழைப்பை போற்ற வேண்டும். இன்னொரு பொருள், மூல பாடத்தை அறிய வேண்டும். ஒன்றை படிக்கும் போது, அதற்க்கு முன்னால் அது பற்றிய கருத்தினை அறிய வேண்டும்.


கேட்டவை நினைத்தல் = கேட்ட கருத்துகளை மீண்டும் மீண்டும் நினைத்து பார்க்க வேண்டும்


ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் = மனதில் சரியாக அமையவில்லை என்றால், ஆசிரியரிடம் கேட்டு மனதில் சரியாக படிய வைத்துக் கொள்ள வேண்டும்.


அம் மாண்பு உடையோர் தம்மொடு பயிறல் =  மேலும்,  அந்த மாதிரி படிக்கும் குணம் உள்ள மாணவர்களோடு சேர்ந்து படிக்க வேண்டும். (படிக்கிற பிள்ளைகளோடு சேர்ந்து படிக்க வேண்டும்)

வினாதல் = எதையும் கேள்வி கேட்க்க வேண்டும். படிக்கும் எதையும்  ஏன், எதற்கு என்று கேட்டு ஆராய வேண்டும்.

வினாயவை விடுத்தல் = மற்றவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.


என்று இவை = என்ற இவைகளை

கடனாக் கொளினே = கடமையாகக் கொண்டால்

 மடம் நனி இகக்கும் = மடமை வேகமாக நீங்கும்



5 comments:

  1. Along with National anthem,and school anthem, this poem should be recited (with meaning) everyday in all the schools. Im really proud to be born in such a society and also ashamed that we lost all these treasures without knowing their values. How many tamilians know nannool today?

    ReplyDelete
  2. புவனாவின் கேள்வி நல்ல கேள்விதான். ஆனால் அதை அவர் தமிழில் எழுதியிருக்கலாம்!

    நல்ல பாடல்.

    ReplyDelete
  3. சூப்பர்

    ReplyDelete