சிலப்பதிகாரம் - மனைவியின் வாடிய மேனி கண்டு
மாதவியோடு சில காலம் தங்கி, பொருளை எல்லாம் தொலைத்து விட்டு கண்ணகியைத் தேடி வருகிறான் கோவலன்.
தான் செய்த தவறுக்கு காரணம் சொல்லவில்லை. கண்ணகியை நேருக்கு நேர் பார்த்து
"பொய்யான பெண்ணோடு கூடி, நம் முன்னோர்கள் சேர்த்துத் தந்த பொருள் யாவும் தொலைத்து விட்டேன். இப்போது ஒன்றும் இல்லாமல் வந்து நிற்கிறேன். இது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது "
என்றான்.
வீடு வந்தவுடன் நேரே படுக்கை அறைக்குப் போகிறான். "பாடு அமை சேக்கை " என்கிறார் இளங்கோ. பெருமை வாய்ந்த படுக்கை அறை என்று அதற்கு பெருமை சேர்கிறார் இளங்கோ. அங்கே கண்ணகி வாடி வதங்கி படுத்து இருக்கிறாள். அவளை கண்டு வருந்துகிறான் கோவலன்.
பாடல்
பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன
சீர் பிரித்த பின்
பாடு அமை சேக்கையுள் புகுந்து தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி
குலம் தரும் வான் பொருள் குற்றைத் தொலைந்த
இலம் பாடு நானும் தரும் எனக்கு என
பொருள்
பாடு அமை = பெருமை சேர்ந்த
சேக்கையுள் = படுக்கை அறையுள். ஒன்று சேரும் அறை சேக்கை
புகுந்து = நுழைந்து
தன் = தன்னுடைய
பைந்தொடி = ஆபரணங்களை அணிந்த பெண். ஒரு வேளை அணிந்திருந்த என்ற நோக்கில் கூறி இருப்பாரோ
வாடிய மேனி = வாடிய மேனி
வருத்தம் கண்டு = வருந்தம் கண்டு
யாவும் = அனைத்தையும்
சலம் புணர் கொள்கைச் = வஞ்சகக் கொள்கை கொண்ட
சலதியொடு ஆடி = பொய்யான பெண்ணின் பின்னால் போய்
குலம் தரும் = என் முன்னோர்கள் சேர்த்து வைத்த
வான் பொருள் குற்றைத் = வானத்தை எட்டும் அளவுக்கு குன்று போல குவித்து இருந்த செல்வத்தை
தொலைந்த = தொலைத்த
இலம் பாடு = ஒன்றும் இல்லாமல் படும் பாடு , இலம் பாடு
நாணும் தரும் எனக்கு என = நாணத்தையும் தரும். நாணும் என்பதில் உள்ள "ம்" பலப் பல பொருள்களைத் தருகிறது. வருமையைத் தரும், இழிவைத் தரும், துன்பத்தைத் தரும் , நாணத்தையும் தரும்.
எனக்குள் ஒரு சந்தேகம்....
அழகான மனைவி - கண்ணகி ஒன்றும் அழகில் குறைந்தவள் அல்ல.
குன்றைப் போல குவித்து வைத்த செல்வம்.
ஏன் கோவலன் கண்ணகியை விட்டு மாதவி பின் போனான் ?
கோவலனைப் போகத் தூண்டியது எது ?
கண்ணகிகள் சிந்திக்க வேண்டிய விஷயம்.
கொழுப்பெடுத்து போய் போனான்.
ReplyDeleteஇதற்காக கண்ணகி நொய் நொய்னு பிடுங்கி இருப்பாள், அதனால் தான் மாதவி பின்னால் போனான் , பெண்களே கணவன்களை பிடுங்கி எடுக்காதீர்கள் அன்று அறிவுரை சொல்ல வேண்டாம். ஒரு மோசமான கணவனுக்கு மொத்த உதாரணம் கோவலன். அவன் குற்றங்களுக்கு கண்ணகியை குறை சொல்ல வேண்டாம்.
புவனா சொல்வது சரிதான். ஒரு பெண்ணைக் கற்பழித்தால், அவள் கற்பழிக்கும்படி என்ன செய்தாள் என்று சொல்லும் நம் சமூகத்தினர் போலப் பேச வேண்டாம்.
ReplyDeleteKelviya Paru , andha kalathula en 40 varushathuku munadi kuda ipadithan ,2 wife nu ponanga
ReplyDeleteI generally do not respond to the feedbacks posted because it will be a never ending story. Repl, reply to reply, reply to reply to reply etc. I respect the reader's views. They can post their views and I do not want to counter their views. Hence, I generally do not respond to the replies. However, in this case, I want to clarify one thing. I am not saying Kovalan is right or Kannagi is wrong etc. Silapadhikaram makes it very clear in the beginning itself that all things happen as per fate. "oozhvinai uruthtu vandhu oottum". I am aware of that line. Hence, I do not support or reject any character.
DeleteThen u asked what kannagi done wrong with him?? Street dogs roaming for their happiness, even pet dogs also mingles with them, for this will u ask pet owner, as why did u let them allow to street, u can control it la?? Hmm? Pls think and post questions. Ok. Thank u.
Delete"கண்ணகி ஒன்றும் அழகில் குறைந்தவள் அல்ல"-- citation please
ReplyDeleteஆமா! நீ பாத்த
Deleteமாதவியோ கண்ணகியோ மணிமேகலையோ ஔவையோ காரைக்காலம்மையாரோ அனைவரும் பெண்ணினம் . அவர்களுக்கு அக்கால ஆண்மையச்சமூகத்தில் நிகழ்த்தப்பட்ட அனைத்தும் கொடுமைகளே! அவற்றை விரித்துப் பேச இப்பகுதி போதாது என்பது மட்டும் நிதர்சனம்.
ReplyDeleteஇரா.சு.முருகானந்தம்