இரணியன் வதம் - ஒவ்வொருவருக்கும் ஒரு முகம்
நரசிங்கத்தின் உருத்திர உருவத்தை கண்டு சேனைகள் சிதறி ஓடின.
இரணியனின் சேனை பெரியது ? ஆயிரக்கணக்கான வீரர்கள்.
இங்கே கம்பனின் கற்பனை எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.
ஓடும் ஒவ்வொரு வீரர் முன்னாலும் ஒரு நரசிங்கம் நின்றதாம் ? எப்படி ?
அவ்வளவு வேகமாக அது வீரர்களிடையே புகுந்து புறப்பட்டது. ஒவ்வொரு வீரரும் அந்த நரசிங்கம் தன் முன்னால் நிற்பது மாதிரி தெரிந்து அலறுகிறார்கள்.
சிங்க முகம் எப்படி இருக்கும் ? கோரை பற்களுடன், பிடரி மயிர் சிலிர்க்க பயங்கரமாக இருக்கும்தானே ?
கம்பன் சொல்கிறான் - திருமுகம் என்று. அவனுக்கு அந்த ஆக்ரோஷமான முகம் கூட அருள் வழியும் முகமாக தெரிகிறது.
நரசிங்கத்தின் தோள்கள் பொன்னை போல ஒளி வீசுகின்றன.
கண்கள் தீயை போலசிவந்து ஜ்வாலை விடுகின்றன.
பாடல்
'ஆயிரங்கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு, அங்கு அங்கு,
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம், இரட்டிப் பொன் தோள்,
தீ எனக் கனலும் செங் கண் சிரம்தொறும் மூன்றும், தெய்வ
வாயினில் கடல்கள் ஏழும், மலைகளும், மற்றும், முற்றும்.
பொருள்
ஆயிரங்கோடி வெள்ளத்து = வெள்ளம் என்பது ஒரு படையின் அளவு. ஆயிரம் கோடி வெள்ளம். மிகப் பெரிய சேனை.
அயில் எயிற்று அவுணர்க்கு = வேலைப் போல கூர்மையான பற்களை உடைய அரக்கர்களுக்கு
அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் ப கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே
என்பது கந்தர் அலங்காரம்
அங்கு அங்கு = அந்த சேனை வீரர்கள் எங்கெங்கு போகிறார்களோ அங்கங்கு
ஏயின ஒருவர்க்கு = சென்ற ஒவ்வொருவருக்கும்
ஓர் ஓர் திருமுகம் = ஆளுக்கு ஒரு திருமுகம் காட்டியது அந்த நரசிங்கம்
இரட்டிப் பொன் தோள் = இரண்டு பொன் போல ஒளிரும் தோள்கள்
தீ எனக் கனலும் செங் கண் = தீயைப்போல தகிக்கும் சிவந்த கண்கள்
சிரம்தொறும் மூன்றும் = மூன்று சிரங்கள்
தெய்வ வாயினில் = அருள் சுரக்கும் அந்த தெய்வ வாயினில்
கடல்கள் ஏழும்,= ஏழு கடலும்
மலைகளும் = ஏழு மலைகளும்
மற்றும், முற்றும். = மற்று உள்ளது எல்லாம் முற்றுமாக இருந்தது
wow!wow!wow!what is that matrum and mutrum?
ReplyDelete"மற்றும் முற்றும்" - ஆஹா!
ReplyDelete