Wednesday, May 22, 2013

நாச்சியார் திருமொழி - அவன் நிறத்து பாதகர்களே


நாச்சியார் திருமொழி - அவன் நிறத்து பாதகர்களே 


நீங்கள் யாரையாவது ரொம்ப ரொம்ப ஆழமாக நேசிக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்...நீங்கள் ஏதோ வேலையாக போய்  கொண்டிருகிறீர்கள்...அந்த வழியில் உங்கள் மனம் கவர்ந்தவரின் பெயர் உள்ள பெயர் பலகையோ, அந்த பெயரை சொல்லி யாரோ அழைத்தாலும் உடனே உங்கள் மனதில் அந்த மனம் கவர்ந்தவரின் முகம் தென்றலாய் வருடி  போகும் அல்லவா ? அவர்களுக்கு பிடித்த ஒரு பூவோ, ஒரு பாடலோ நீங்கள் செல்லும் வழியில் கேட்டால் அவர்கள் நினைவு மனதுக்குள் மழை தூறி போகும் தானே ? அவர்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுமே? இப்போது என்றால், உடனே கை பேசியை தட்டி அவர்களை கூப்பிட்டு பேசி விடலாம்...

ஆண்டாள் காலத்தில் அது எல்லாம் முடியுமா ? அதுவும் அந்த திருமாலுக்கு எந்த எண்ணுக்கு போன் செய்வது.

சும்மா இருக்க மாட்டாமல் இந்த குயிலும், மயிலும்,  களாப் பழங்களும், கருவிளம் பூக்களும் அந்த திருமாலின் நிறத்தில் தோன்றி, அவனை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு என்னை பாடாய் படுத்துகின்றன என்று அவற்றின் மேல் செல்ல கோபம் கொள்கிறாள் ஆண்டாள்.

பாடல்



பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண் கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? 

பொருள்





பைம்பொழில் = பசுமையான சோலை

வாழ்குயில்காள்! = வாழும் குயில்களே

மயில்காள்! = மயில்களே

ஒண் கருவிளைகாள்! = கார்கானம் பூக்களே

வம்பக் களங்கனிகாள்! = களங்  கானை பழங்களே

வண்ணப்பூவை நறுமலர்காள் = நறு மணம் வீசும் காயம் பூக்களே

ஐம்பெரும் பாதகர்காள் = நீகள் ஐந்து பெரும் பெரிய பாதகர்கள்

அணிமாலிருஞ் சோலைநின்ற = திருமால் இருக்கும் சோலை (அழகர் கோவில் )

எம்பெரு மானுடைய = எம் பெருமானுடைய

நிறமுங்களுக் கெஞ்செய்வதே ? = இந்த கருமையான நிறம் உங்களை என்ன செய்தது.அதாவது , இந்த நிறத்தை வைத்துக் கொண்டு என்னை என்ன பாடு படுத்துகிறீர்கள். இது உங்களுக்கு தேவையா ?




1 comment:

  1. தூள் பாட்டு. "ஐம்பெரும் பாதகர்காள்!" - நான் மன்னனாக இருந்திருந்தால், இந்த இரண்டு வார்த்தைக்கே பொன் கழி கொடுத்திருப்பேன்.

    ReplyDelete