திருக்குறள் - சுற்றத்தார் கண்ணே உள
சுற்றத்தார் கண்ணே யுள.
வர வர திருக்குறள் பற்றி எழுதவே அச்சமாக இருக்கிறது.
பெரியவர்கள் தீயவர்களோடு சேர மாட்டார்கள் என்று வள்ளுவர் கூறினார் என்றால், அப்படி என்றால் தீயவர்களை எப்படி திருத்துவது....நாங்கள் தீயவர்களோடு சேர்ந்து, அவர்களோடு உறவாடி, அவர்களை திருத்தப் போகிறோம்...வள்ளுவர் கிடக்கிறார், அவருக்கு என்ன தெரியும்...நாங்கள் ஆள் என்று சில பேர் கிளம்பி விடுகிறார்கள்.
திருக்குறளைப் படித்து கெட்டு போக சிலர் தயாராக இருக்கிறார்கள்.
இவர்கள் மத்தியில் மேலும் குறள்களை சொல்ல அச்சமாக இருக்கிறது.
வள்ளுவர் கள் உண்ணாதே என்று இருக்கிறார் என்றால், அப்படி என்றால் கள் இறக்குபவன், அதை விற்பவன் பாடு என்ன ஆவது. அவர்களுக்கு யார் உதவி செய்வார்கள். எனவே,நான் கள் குடித்தே தீருவேன் என்று ஆரம்பித்தால் என்ன செய்வது?
திருடாதே என்று சொன்னால்...பின் காவல் காரர்களுக்கும், நீதி பதிகளுக்கும் யார் வேலை தருவார்கள். அவர்களைப் பற்றி இந்த வள்ளுவருக்கு அக்கறை இல்லை. அவர்களுக்கு வாழ்வு அளிக்கவாவது நான் திருடப் போகிறேன் என்று கிளம்பி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.
அறம் சொல்லுவது கடினமான வேலைதான் போல் இருக்கிறது.
விதுரன் சொன்னதை கேட்கவில்லை துரியோதனன். சகுனி சொன்னதைக் கேட்டான்.
வசிஷ்டர் சொன்னதை கேட்கவில்லை கைகேயி, கூனி சொன்னதை கேட்டாள் .
விபீஷணன் சொன்னதை கேட்கவில்லை இராவணன், சூர்பனகை சொன்னதை கேட்டான்.
அததற்கு நேரம் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
நான் யோசிப்பது உண்டு...ஏன் நம் முன்னோர்கள் தாங்கள் அறிந்த இரகசியங்களை எல்லோருக்கும் சொல்லிப் போகவில்லை என்று.
இப்போது தெரிகிறது.
பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டி இருக்கிறது.
குழந்தையிடம் வைரத்தை கொடுத்தால் அதுக்கு என்ன தெரியும். தூக்கிப் போட்டு விடும். நாள் ஆக வேண்டும், வைரத்தின் மதிப்பு தெரிய.
குறள் படித்து சிலர் கெட்டுப் போக நான் காரணமாக இருக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.....
A big misunderstanding. I never said that we should join all the bad people and correct them or perish in that attempt.. But my question is should all the juvenile schools and de-addiction centers should be abolished and made as quarantine cells. If by chance someone became bad, shouldn't there be any options for them to correct or guide.
ReplyDeleteஅதற்காக நான் தீயவர்களோடு சேர்ந்து நானும் கேட்டு போக போகிறேன்என்று நான் சொல்லவே இல்லை. கெட்டவர்கலுக்கும் திருந்த ஒரு வழி இருக்க வேண்டும், வழி நடத்த சில நல்லவர்கள் முன் வரவேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
நான் புவனா சொல்வதை ஆமோதிக்கிறேன். கேட்டவருடன் சேராதீர்கள் என்று சொன்னால், அவர்களுடன் சேர்ந்து கேட்ட செயல் செய்யதீர்கள் என்று பொருள். அவர்களுடன் பழகி, அவர்களைத் திருத்தவோ, அவர்களுக்கு உதவி செய்யவோ கூடாது என்பது போருள் அல்ல.
ReplyDelete