Friday, February 17, 2023

திருக்குறள் - புறங்கூறாமை - அறன்நோக்கி ஆற்றுங்கொல்

        

 திருக்குறள் - புறங்கூறாமை -  அறன்நோக்கி ஆற்றுங்கொல் 



(இந்த அதிகாரத்தின் ஏனைய குறள் பதிவுகளை இந்த பக்கத்தின் முடிவில் காணலாம்)


சில சமயம் நமக்கு பிடிக்காத வேலைகளைக் கூட நாம் "எல்லாம் என் தலை எழுத்து" என்று நொந்துகொண்டே செய்வோம். 


மனதுக்கு பிடிக்காத வேலையாக இருக்கும். வேறு வழியில்லாமல் செய்வோம். ஏதோ முன் பிறவி வினை என்று நினைத்துக் கொண்டு செய்வோம் அல்லவா?


அது போல, 


இந்த பூமியும், புறம் சொல்லுவாரை தாங்குகிறதாம். செய்ய வேண்டியது என்ன என்றால், நிலம் பிளந்து அவர்களை அப்படியே விழுங்கி விட வேண்டும். அப்படிச் செய்யாமல், புறம் கூறுபவர்களை நிலம் தாங்கிக் கொண்டு இருக்கக் காரணம், அது தனக்கு விதித்த அறம்  என்று நிலம் நினைபதால் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_4.html


(pl click the above link to continue reading)


அறன்நோக்கி = அறம் என்று கருதி 


ஆற்றுங்கொல் = பொறுத்துக் கொண்டு இருக்கிறதோ ?


வையம் = இந்த பூமி 


புறன்நோக்கிப் = மற்றவர்கள் சென்ற பின் அவர்கள் பின்னால் (புறத்தே) 


புன்சொ லுரைப்பான் = தீய சொற்களை சொல்லுபவனின் 


பொறை = சுமை 


அதாவது, அப்படிப்பட்டவர்கள் இந்த உலகிலேயே இருக்கக் கூடாது என்கிறார். இருக்கிறார்களே என்றால், பூ மகள் அறம் நோக்கி அவர்களை தாங்கி நிற்பதால் என்கிறார். அது மட்டும் இல்லை என்றால் இந்த புறம் சொல்பவர்களை நிலம் என்றோ விழுங்கி இருக்கும் என்கிறார். 


அந்த அளவுக்கு புறம் சொல்லுவது குற்றம் என்று சொல்கிறார். 


பலர் அது ஏதோ ஒரு பொழுது போக்கு என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 


படிக்க வேண்டும். 


படித்தபின் மாற வேண்டும். 






(அறன் அல்ல



https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_23.html



அறனழீஇ 


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_5.html


அறம்கூறும் ஆக்கம்


https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_11.html


முன்இன்று பின்நோக்காச் சொல்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_16.html


புன்மையால் காணப் படும்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_21.html


பிறன்பழி கூறுவான் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_25.html


பகச் சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_31.html


தூற்றும் மரபினார்



No comments:

Post a Comment