கந்தரனுபூதி - கருதா மறவா
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
நாம் வாழ்வை முழுவதுமாக ஏற்றுக் கொள்வது இல்லை.
வாழ்வின் பெரும் பகுதியை நாம் வேண்டாம் என்று விலக்கி விடுகிறோம். நமது இன்னல்களுக்கு அதுதான் காரணம்.
இனிப்பு பிடிக்கும். நிறைய வேண்டும். கசப்பு பிடிக்காது. வேண்டவே வேண்டாம்.
இன்பம் வேண்டும். துன்பம் வேண்டாம்.
இப்படி வாழ்வை கூறு போட்டு, அது வேண்டும், அது விரும்பத் தக்கது, அது வேண்டாம், அது வெறுக்கத் தக்கது என்று நாம் விலக்கி வைக்கிறோம்.
இதனால் என்ன ஆகிறது?
விரும்பியது வேண்டும் என்ற ஆசை எழுகிறது. ஒன்று கிடைத்தால் அதை விட மேலே வேண்டும் ஆசை நிரந்தரமாக நம்மை தள்ளிக் கொண்டே இருக்கிறது.
விரும்பியதை அடைய முடியாதோ என்ற பயம் வருகிறது. யாரும் தடுத்து விடுவார்களோ என்ற ஐயம் வருகிறது. விரும்பியது கிடைத்தாலும் அதை பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை வருகிறது.
அது ஒரு புறம் இருக்க,
விரும்பாதது வந்து விடுமோ என்ற கவலை. வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம். அதில் இருந்து எப்படி தப்புவது என்ற தவிப்பு.
இப்படி வாழ்வை இரண்டாகப் பிரித்து வைத்துக் கொண்டு நாம் அன்றாடம் அல்லாடுகிறோம்.
சரி, அதுக்காக இன்பமும், துன்பமும் ஒன்றாக முடியுமா? பண வரவும், பணம் தொலைந்து போவதும் ஒன்றாக முடியுமா? என்று கேட்டால்....முடியாது. கடினம்தான்.
இறைவன் அருள் இல்லாவிட்டால் இந்த சம நோக்கு வராது.
இதை "இருவினை ஒப்பு" என்பார்கள்.
அருணகிரிநாதருக்கு தெரிகிறது. இந்த இரு நிலை தான் துன்பத்துக்குக் காரணம் என்று. ஆனாலும், விட முடியவில்லை. தவிக்கிறார்.
முருகா, எனக்கு அருள் செய்ய மாட்டாயா? இந்த இரு வித நோக்கங்கள் போய், ஒன்றாகக் காணும் காட்சியை எனக்கு எப்போது அருள்வாய் என்று கேட்கிறார்.
பாடல்
கருதா மறவா நெறிகாண வெனக்
கிருதாள் வனசந்தர வென் றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூர விபாடணனே .
(pl click the above link to continue reading)
கருதா = நினைப்பது
மறவா = மறப்பது
நெறிகாண = இப்படி நினைப்பு, மறுப்பு என்ற இரு நிலை இல்லாத வழியை நான் காண
வெனக் = எனக்கு
கிருதாள் = உன்னுடைய இரண்டு திருவடிகளை
வனசந்தர வென் றிசைவாய் = வனசம் தர என்று இசைவாய்? வனசம் என்றால் தாமரை மலர் என்று பொருள். உன் திருவடித் தாமரைகளை தர என்று இசைவாய்?
வரதா = வரம் தருபவனே, அல்லது வரை இல்லாமல் கொடுப்பவனே
முருகா = முருகா
மயில் வாகனனே = மயிலை வாகனமாகக் கொண்டவனே
விரதா = விரதங்களினால் அடையப் படுபவனே
சுர = தேவர்களின் அதிபதி (சுர எதிர்மறை அசுர)
சூர = சூரபத்மனின்
விபாடணனே . = பாடாணம் என்றால் கல், பாறை. ஆதியில் உயிர் பாடாண நிலையில் இருந்தது என்று சொல்லுவார்கள். அதாவது, கல் போலக் கிடந்தது என்று பொருள். பாறை போல் உறுதியான, ஈரம் இல்லாத சூர பத்மனை அழித்தவனே
இன்ப துன்பங்களை ஒன்றாக ஏற்றுக் கொள்வது என்பது நீண்ட பயிற்சிக்குப் பின் வருவது.
முதல் படியாக, துன்பமே வேண்டாம், துன்பம் வரவே கூடாது, வலியே கூடாது என்று விறைப்பாக இல்லாமல், வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் கலந்ததுதான். வரட்டும் பார்ப்போம் என்று இருக்க வேண்டும். சரி, இன்று இந்தத் துன்பம் வந்து விட்டது. சரி, இதை ஏற்றுக் கொள்வோம் என்று பக்குவப் பட வேண்டும். அதற்காக துன்பத்தைக் கண்டு துவண்டு விடக் கூடாது.
வரட்டுமே, வந்தால் என்ன. சமாளிப்போம் என்று இருக்க பழக வேண்டும். துன்பம் கட்டாயம் வரும். நாம் எவ்வளவுதான் வேண்டி விரும்பினாலும், அது நம்மை விடாது. எனவே, அதைக் கண்டு ஓடுவது ஒரு பயனும் தராது.
துன்பமும் வாழ்வின் ஒரு பகுதி என்ற எண்ணம் வந்து விட்டால், வாழ்க்கை சமனப்படும்.
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
மெய்யியல் - பகுதி 5
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
மெய்யியல் - பகுதி 6
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html
மெய்யியல் - பகுதி 7
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html
நின்று தயங்குவதே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html
வள்ளி பதம் பணியும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html
விடுவாய் வினையா வையுமே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html
பரிசென் றொழிவேன்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html
எதிரப் படுவாய்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html
முருகன் கழல் பெற்று உய்வாய்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html
என்று அருள்வாய் ?
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html
யாமோதிய கல்வியும் பாகம் 2
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html
உதியா மரியா
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html
மிடியென் றொரு பாவி
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html
உபதேசம் உணர்தியவா
]
No comments:
Post a Comment