Sunday, February 12, 2023

கந்தரனுபூதி - மிடியென் றொரு பாவி

                    

 கந்தரனுபூதி - மிடியென் றொரு பாவி




(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்) 


மதம் என்பது ஒரு ஆடம்பரம் என்பார்கள் (religion is a luxury).  அடுத்த வேளைக்கு உணவு இல்லாதவன் ஆத்மா, வீடு பேறு, பிரம்மம் என்று ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டான். அவன் கவலை எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் பசிக்கும். உணவுக்கு என்ன செய்வது என்பது பற்றித்தான் அவன் கவலை எல்லாம் இருக்கும். அவனிடம் போய் அத்வைதம், துவைதம் என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். 


இறைவனை நாடிச் செல்வது என்றாலும், பொருள் வேண்டும். 


உணவு, உடை, வீடு, எதிர்காலம் பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் இருந்தால்தான் தேவாரம், திருவாசகம் எல்லாம் படிக்க மனம் ஓடும். 


வறுமை வந்து விட்டால் படித்த படிப்பு, குலம், அழகு, குடிப்பிறப்பு எல்லாம் போய் விடும். 


எல்லாம் துறந்தால் தான் இறைவனை அடைய முடியும் என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல. எங்கே,இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து பாருங்கள். பசி அழைக்கிறதா, பக்தி அழைக்கிறதா என்று தெரியும். 


இரண்டு நாள் முடியும் என்றால், இருப்பது நாள் இருந்து பாருங்கள். 


கடன்காரன் வருவான், வீட்டை காலி பண்ணச் சொல்லுவான், பிள்ளைகளோடு தெருவில் நிற்க வேண்டி வரும் என்ற பயம் இருந்தால், பக்தி வருமா?


சொல்லுவது அருணகிரிநாதர். 


பாடல் 


வடிவுந் தனமு மன முங் குணமுங் 

குடியுங் குலமுங் குடி போகியவா 

அடியந் தமிலா வயில் வேலரசே 

மிடியென் றொரு பாவி வெளிப்படி னே 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html


(pl click the above link to continue reading)



வடிவுந் = அழகான வடிவமும் 


தனமும் = செல்வங்களும் 


மனமுங் = மன வலிமையையும் 


குணமுங்  = நல்ல குணங்களும் 


குடியுங் = குடிப்பிறப்பும் 


குலமுங் = குலமும் 


குடி போகியவா  = முழுவதும் போய் விடும் 


அடி = தொடக்கம் 


அந் தமிலா = முடிவு இல்லாத 


வயில் வேலரசே  = கூறிய வேலை உடைய என் தலைவனே 


மிடி = வறுமை 


யென் றொரு பாவி = என்ற ஒரு பாவி 


வெளிப்படி னே  = நம்மைப் பிடித்துக் கொண்டால் 


வறுமை வந்துவிட்டால் எல்லாம் போய் விடும். 


பசி இருக்கும் இடத்தில் பக்தி இருக்காது. 


எனவேதான் வள்ளலார் அணையா அடுப்பு ஏற்றி பசி என்று வந்தவர்களுக்கு எல்லாம் உணவு அளித்தார். 


சரி, அருணகிரிநாதர் சொல்லிவிட்டார் என்பதற்காக பொருள் சம்பாதிப்பதே குறி என்று இருக்கக் கூடாது. 


அவர், செல்வத்தை சேர்க்கச் சொல்லவில்லை. 


வறுமை இல்லாமல் பார்த்துக் கொள் என்கிறார். 


இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.


துறவிக்கும் உணவு வேண்டும். 


எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்குப் போ என்று சொல்லவில்லை. அதற்காக வாழ்நாள் முழுவதும் பணம் சேர்த்துக் கொண்டே இரு என்றும் சொல்லவில்லை. 


பக்திப் பாடல்களுக்கு நடுவே இப்படி ஒரு ஆச்சரியமான பாடல். 





 [

மெய்யியல் - பகுதி 1 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html


மெய்யியல் - பகுதி 2

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html


மெய்யியல் - பகுதி 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html


மெய்யியல் - பகுதி 4


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html


மெய்யியல் - பகுதி 5 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html


மெய்யியல் - பகுதி 6 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html


மெய்யியல் - பகுதி 7

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html


நின்று தயங்குவதே 


https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html


வள்ளி பதம் பணியும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html


விடுவாய் வினையா வையுமே 

https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா

https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html


 பரிசென் றொழிவேன் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html



எதிரப் படுவாய்


https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html


மெய்ப் பொருள் பேசியவா


https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ



https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html


முருகன் கழல் பெற்று உய்வாய்

https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html


என்று அருள்வாய் ? 



பேராசை எனும் பிணியில் பிணிபட்டு






யாமோதிய கல்வியும் பாகம் 1 


]




No comments:

Post a Comment