Friday, April 26, 2013

திருக்குறள் - நெற்றி


திருக்குறள் - நெற்றி 


திருக்குறளில் தவறா ? திருக்குறளில் பிழையா ? வள்ளுவர் தவறு செய்வாரா ?

நம்ம ஹீரோ பயங்கர சண்டியர். களத்ல இறங்கிட்டர்னா இரண்டுல ஒண்ணுல   பாத்துருவார். பயம்னா என்னனே தெரியாது.

இவரு பேரை கேட்டாலே எதிரிங்க ஓடிருவாங்க. இவர் கூட சண்டை போடவே யாரும் வரமாட்டாங்க. அப்படி பின்னி பெடல் எடுக்கிறவர்.

என்ன செய்ய, தலைவிய பார்த்தவுடன் ஆள் அம்பேல்.

சோலையில் அவளைப் பார்த்தார்.

தேவதையோ, மயிலோ, மனிதப் பெண்ணோ என்று வியந்தார் பின்
அவளை கொஞ்ச கொஞ்சமாய் இரசிக்கிறார்...கண்ணு , புருவம் என்று ஒவ்வொன்றாய் இரசிக்கிறார் என்று இதற்க்கு முந்தைய குறள்களில் பார்த்தோம் ...

இப்ப கொஞ்சம் அப்புல (up ) சூடுறார்....நெற்றி...

அறிவு ஒளி  பொருந்திய நெற்றி...

பெண்ணுக்கும் நெற்றியும் ஒரு அழகு..பெண்ணிடம் எதுதான் அழகு இல்லை ....

குகனிடம் சொல்லும்போது இராமன் சொல்லுவான்

"இந்நன்நுதல் இவள் நின் கேள்
இந் நளிர் கடல் உலகெல்லாம் உன்னுடையது 
நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன்"

இந்த அழகிய நெற்றியை கொண்ட சீதை உன் உறவினள் என்று கூறுவான்.


வள்ளுவர் சொல்கிறார் அறிவு ஒளி பொருந்திய நெற்றி கொண்ட இந்த பெண்ணை பார்த்தவுடன், போர் களத்திற்கு வராதவர்கள் கூட நடுங்கும் என் வீரம் உண்டைந்து போய் விட்டதே என்று ரொம்ப பீல் பண்ணுகிறார்

ரொம்பதான் பீலிங்கு....

பொண்ணு அழகு மட்டும் அல்ல ...படித்த பொண்ணு....அறிவு முகத்தில் தெரியுது .....

பாடல்

ஒள்நுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு.



பொருள்






ஒள் =  Bright intelligence; அறிவின் ஒட்பம். அறிவொளி பொருந்திய. ஒள் என்ற வார்த்தையில் இருந்து வந்தது ஒளி என்ற சொல்.

நுதற்கோ = நெற்றிக்கோ

ஒ = ஓ (ஆச்சரியம்)

உடைந்ததே = உடைந்ததே

 ஞாட்பினுள் = போர்க்களத்திற்கு 

நண்ணாரும் = வராதவர்களும் (நண்ணுதல் = நெருங்குதல். நண்பன் = நெருங்கியவன்). போர்க்களம் பக்கம் வரதாவர்களும், போர்களத்தை நெருங்காதவர்களும்

உட்கும் =  To be afraid; to stand in awe, show signs of fear;  பயப்படும், ஆச்சரியப்படும், மிரளும்

என் பீடு = என் பெருமை அல்லது என் வீரம்

பெண்ணின் அழகின் முன் தோற்பது ஆணின் வெற்றி.

சரி, முதலில் ஏதோ குறளில் பிழை என்று சொன்ன மாதிரி இருந்ததே ...அது என்ன பிழை....இந்த பாட்டில் என்ன பிழை ?

தற்பெருமை சொல்லுவது ஒரு பாட்டின் தலைவனுக்கு அழகல்ல. தன் பெருமையை தானே பேசுவது பிழை. ஒரு தலைவனுக்கு அது அழகல்ல.

இந்த குறளில் தலைவன் தன் வீரம் பற்றி தானே பேசுகிறான்.

அது பிழை.

ஆனால் பரிமேல் அழகர் வள்ளுவருக்கு வக்காலத்து வாங்குகிறார்.

கழிந்ததற்கு இரங்கலின், தற்புகழ்தல் அன்றாயிற்று என்கிறார்

பரிமேல் அழகர் என்ன சொல்கிறார் என்றால், இந்தப் பாடலில் தலைவன் பழைய  பெருமையை (கழிந்தது) சொல்லுவதால் அது பெரிய பெருமை கிடையாது. நான் ஒரு காலத்தில் பெரிய பணக்காரனாய் இருந்தேன், ஏகப்பட்ட நிலம் , வீடு, அஞ்சு காரு இருந்தது....எல்லாம் தொழிலில் வந்த நட்டத்தில் போயிருச்சு ...இப்ப கைல காலணா இல்லை என்று ஒருவர் கூறினால் அது பெருமை  பேசுவதாக இருக்காது...தன்னுடைய நிலையை கூறி அவர் வருந்துவதாகத்  தான் கொள்ள முடியும்.

இங்கே தலைவனும், அப்பேற்பட்ட வீரம் உடைந்து போய் விட்டதே என்று கூறி  வருந்துவதால் தற்பெருமை ஆகாது....

அது வருத்தமா ? ஜொள்ளா என்று நமக்குத்தானே தெரியும்....



1 comment:

  1. எதுவா இருந்தா என்ன? எங்களுக்குத் தேவை ஜொள்ளு மட்டுமே!

    ReplyDelete