Friday, April 19, 2013

திருவாசகம் - கெடுதலிலும் நன்மை


திருவாசகம் - கெடுதலிலும் நன்மை 


ஏதாவது கெட்டுப் போனால் நாம் சந்தோஷப் படுவோமா ?

மாணிக்க வாசகர் சந்தோஷம் மட்டும் அல்ல தோள் கொட்டி ஆடுகிறார்....

இந்த உலகம் ஒரு நாள் மறைந்து போகும்...இந்த சூரியன், விண்மீன்கள் எல்லாம் ஒளி இழந்து, வெப்பம் இழந்து, இருக்கும் இடம் தெரியாமல், வெட்ட வெளியாகப் போகும்.

அந்த வெட்ட வெளி கூட மறைந்து போகும்...எல்லாம் மறைந்தாலும் இறைவன் மறைவது இல்லை....

என் உடல் கெட்டு, உயிர் கெட்டு , உணர்வு கெட்டு , உள்ளமும் போய் , நான் என்ற எண்ணமும் போய் மறையும் ...அந்த மறைவை கொண்டாடுவோம் என்கிறார் வாசகர்.....

என்னுடைய உடல், என்னுடைய உயிர், என் மனம் என்ற அகங்காரம் மறையும்....

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே என்பார் அருணகிரிநாதர். எல்லாம் இழப்பது நலம்.

பாடல்


வான்கெட்டு மாருத மாய்ந்தழல்நீர் மண்கெடினுந்

தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்
கூன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டேன் உள்ளமும்போய்
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ.

பொருள்





வான்கெட்டு = இந்த வான வெளி ஒடுங்கி

மாருத மாய்ந் = காற்று ஓய்ந்து போய்

தழல் = தீ

நீர் = நீர்

மண் = நிலம் 


கெடினுந் = கெடினும், மறையினும், ஒடுங்கினும் 

தான்கெட்ட லின்றிச் = தான் மட்டும் மறையாமல்

சலிப்பறியாத் தன்மையனுக் = இதனால் சலிப்புராமலும்

கூன்கெட் டு = இந்த ஊன் உடம்பு கெட்டு , அழிந்து

யிர்கெட் டு  = உயிர் ஒடுங்கி

ணர்வுகெட் = உணர்வு கெட்டு

டேன் உள்ளமும்போய் = என் உள்ளமும் போய்

நான்கெட்ட வா = நானும் மறைந்து போனதை

பாடித் = பாட்டுப் பாடி

தெள்ளேணங் கொட்டாமோ. = தெள்ளேணம் கொட்டாமோ ? ஒருவிதமான வாத்திய கருவி



1 comment:

  1. எல்லாம் அழிந்தாலும், தான் அழியாத் தன்மையனின் எல்லா உணர்வுகளும் அழிந்ததைக் கொண்டாடுகிறார்! ஆஹா!

    ReplyDelete