Saturday, April 20, 2013

திருக்குறள் - உயிருண்ணும் கண்கள்


திருக்குறள் - உயிருண்ணும் கண்கள் 


தலைவியை மொத்தமா பார்த்த தலைவர் இன்னும் கொஞ்ச கிட்ட போறார்....கண்ணை பார்க்கிறார்....

அவளோட குரலை இன்னிக்கு எல்லாம் கேட்டுகிட்டே இருக்கலாம்...அவ்வளவு இனிமை.

சிரிச்சா சில்லறை சிதறுகிற மாதரி அப்படி ஒரு கல கலப்பு.

விரல்களோ அவ்வளவு மேன்மை...

அலை பாயும் கூந்தல்..

எல்லாம் நல்லாத்தான் இருக்கு...அவளிடம் எல்லாமே இனிமை தான் ஆனால் இந்த கண்ணு இருக்கே ...கண்ணு...அது தான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.....

உயிரை அப்படியே சுருட்டி எடுத்துக்கொண்டு போய் விடும்.....எப்படி இந்த கண்ணு மட்டும் இப்படி இருக்கு...பாக்க என்னமோ வெகுளியாத்தான் தெரியுது...இருந்தாலும்...அப்பப்ப இதய துடிப்பை நிறுத்தி விடுகிறதே ...

பாடல்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக் கமர்த்தன கண்.

பொருள்






கண்டார் = அவளை கண்டவர்கள் , அவளின் கண்களை கண்டவர்கள்

உயிருண்ணும் = உயிரை அப்படியே சாப்பிட்டுவிடும்


தோற்றத்தால் = தோற்றத்தால், வடிவால்

பெண்தகைப் = பெண்மை குணங்கள் நிறைந்த

பேதைக் = வெகுளி (innocent )

கமர்த்தன கண். = அமர்ந்தன கண்கள். அமர்தல் என்றால் வேறுபடுதல். கண்ணு மட்டும் வேறு பட்டு இருக்கிறது.

(இவரை யாரு அந்த கண்ணை போய் பார்க்க சொன்னது ?)
 


1 comment:

  1. அவள் ஒரு பேதை என்று இவருக்கு எப்படித் தெரிந்தது? "Love is blind"

    அருமையான ஜொள்ளுப் பாடல்!

    ReplyDelete