சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 1
பாடல்
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
பொருள்
நேச = அன்பு
அருள் = கருணை
புரிந்து = புரிந்து
நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள வஞ்சனைகள் கெட
பேராது நின்ற = விலகாமல் நின்ற
பெரும் கருணைப் = பெரிய கருணை
பேர் ஆறே = பெரிய ஆறே
ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே
அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே
நீராய் உருக்கி, = நீர் போல உருக்கி
என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல நின்றவனே
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே
இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள் .விளக்கம்
இதன் உள் அர்த்தத்தை சிந்திக்க சிந்திக்க விரியும்
சிந்திப்போம்
No comments:
Post a Comment