Thursday, September 18, 2014

விவேக சிந்தாமணி - சேலை கட்டிய மாதர் 


ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெரும் காற்றையும் நம்பலாம் 
கோலமா மதயானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம் 
காலனார் விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் 
சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே! 

எவ்வளவோ அறங்களை எடுத்துச் சொல்லும் நம் தமிழ் இலக்கியங்கள், பெண்களின் ஆற்றலை குறைத்தே மதிப்பிடுகிறதோ என்று தோன்றுகிறது.

ஏன் பெண்களை நம்பக் கூடாது ?

மற்ற அனைத்திற்கும் ஒரு குறிக்கோள் உண்டு, ஒரு குணம் உண்டு, அவை அப்படித்தான்  இருக்கும்.

பெண்கள் அப்படி அல்ல.  அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன அவர்களின் தேவை என்று அவர்களுக்கே தெரியுமோ  என்னவோ.

 அவர்களை நம்பி ஒரு காரியம் செய்யப் போனால் , இடையில் அவர்கள் மனம் மாறி விட்டால் ?

ஒரு வேளை அப்படி அலை பாயும் மனதை நினைத்துதானோ என்னவோ இந்தப் பாடலை எழுதி இருப்பார்கள் ?




3 comments:

  1. இதை எல்லாம் என்ன சொல்வது? ஆண்கள் எழுதும் பாடல்களில் இதைத் தவிர வேறே என்ன இருக்கும் என்று சொல்வதா? ஆண்களை நம்பிப் பெண்கள் கெட்டதில்லையா?

    ReplyDelete
  2. There is tajmahal for Representing men's love but there is no representation for women's love

    ReplyDelete
  3. எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    (மா / விளம் 3 அரையடிக்கு)
    (1, 5 சீர்களில் மோனை)

    ஆல காலவி டத்தையும் நம்பலாம்
    ..ஆற்றை யும்பெரும் காற்றையும் நம்பலாம்;
    கோல மா,மத யானையை நம்பலாம்
    ..கொல்லும் வேங்கையைப் புலியையும் நம்பலாம்
    கால னார்விடு தூதரை நம்பலாம்
    ..கள்ளர் வேடரை மறவரை நம்பலாம்
    சேல கற்றிய மாதரை நம்பினால்
    ..தெருவில் நின்றுதான் தியங்கியே தவிப்பரே! 12

    ’மீன் போலும் அலைபாயுங் கண்களை உடைய மாதரை நம்பினால், ஆண்கள் தெருவில் நின்று வகையறியாது தவிப்பரே’ எனப் பொருள் கொள்ளலாம்.

    ReplyDelete