விவேக சிந்தாமணி - தெய்வம் எனலாமே
காதலியின் வரவுக்காக காத்திருக்கிறான் காதலன்.
தூரத்தில் அவள் வருவது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் இருக்கும் இடம் நோக்கி வருகிறாள்.
கிட்ட வர வர அவன் இதயத் துடிப்பு எகிறுகிறது. உள்ளம் உருகுகிறது.
இன்னும் அருகில் வந்து விட்டாள் . அவள் கூந்தல் காற்றில் அலை பாய்வது தெரிகிறது. அவள் கரிய கூந்தல் அவன் மனதை மயக்குகிறது. மயில் போல சாயல். பெரிய தனங்கள். இடையோ சிறியது. சிறு குழந்தை போன்ற முகம்.
அவளின் அழகைப் பார்க்கும் போது கை எடுத்து கும்பிடலாம் போல இருக்கும் அழகு.
அப்படி ஒரு தெய்வீக அழகு !
பாடல்
அருகில் இவளருகில் இவளருகில் வர உருகும்
கரிய குழல் மேனியவள் கானமயில் சாயல்
பெரிய தனம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே
ஜொள்ளு மன்னன்!
ReplyDelete