Sunday, September 21, 2014

விவேக சிந்தாமணி - அமுதம் என்று அளிக்கலாமே

விவேக சிந்தாமணி - அமுதம் என்று அளிக்கலாமே 


அமுதம் வேண்டும் என்று தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு கடைந்தார்கள்.

எவ்வளவு பெரிய வேலை அது.

அமுதத்திற்கு ஏன் இவ்வளவு அலைய வேண்டும் ?

என் காதலியின் வாயில் ஊறும் நீரை விடவா அந்த அமுதம் சிறந்தது ?

பாடல்

வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி 
கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல் 
கண்டு சர்க்கரையோ தேனோ கனியடு கலந்த பாகோ 
அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே! 

பொருள்

வண்டு மொய்க்கும் குழல். காரணம் அதில் உள்ள பூக்கள். அப்போதுதான் பறித்த பூக்கள். வண்டுகளுக்குத் தெரியாது அது செடியில் இருக்கிறதா அல்லது அவள் தலையில் இருக்கிறதா என்று. அத்தனையும் புத்தம் புதிய பூக்கள். இன்னும் அதில் தேன் வடிந்து கொண்டிருக்கிறது. வண்டுகள் மொய்க்கின்றன. அப்படி என்றால் அதில் இருந்து வரும் மணம் எப்படி இருக்கும் .....




கெண்டையோடு ஒத்த கண்ணாள்

கெண்டை மீனைப் போன்ற கண்கள். மீன் போல் நீரில் தவழும் கண்கள். மீன் போல் அங்கும் இங்கும் அலையும் கண்கள்.


கிளிமொழி = கிளி போன்ற குரல்


வாயின் ஊறல் = வாயில் ஊற்றெடுக்கும் அமுதம்

கண்டு = அதைக் கண்டு

சர்க்கரையோ  = சர்க்கரையோ

தேனோ = தேனோ

கனியடு கலந்த பாகோ = கனிகளில் இருந்து எடுக்கப்பட்ட பாகோ

அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே! = இதையே அமுதம் என்று அளிக்கலாமே



No comments:

Post a Comment