Thursday, April 5, 2012

நல்லாயிர திவ்ய பிரபந்தம் - வளையல் திருடன்

இந்த அரங்கன் இருக்கிறானே ரொம்ப பொல்லாதவனாய் இருப்பான் போல் இருக்கே.

வாமன உருவமாய் வந்து உலகை எல்லாம் பெற்றுக் கொண்டது போதாது என்று, இப்ப தன் அழகில் என்னையே கொள்ளை கொண்டு போய் விடுவான் போல் இருக்கே என்று ஆண்டாள் செல்லமாக பயப் படுகிறாள்.

----------------------------------------------------------
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே

-----------------------------------------

சீர் பிரித்த பின்

----------------------------------------------------------
பொல்லாக் குறள் உருவாய் பொற் கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் ரங்க நாக
இல்லாதோம் கைபொருளும் எய்துவான் ஒத்து உளானே

----------------------------------------------------------

பொல்லாக் குறள் உருவாய் = குறள் எவ்வளவு சின்ன உருவம். இரண்டு அடி அவ்வளவு தான். ஆனால் எவ்வளவு பொருள் செறிந்தது ? அதுபோல் வாமன உருவமாய் வந்து. பொல்லா குறள் என்றால் ஏதோ தீமை செய்யும் குறள் அல்ல. செல்லமாக சொல்லுவது. துறு துறு என்று வரும் பிள்ளையை "பொல்லா பிள்ளை" என்று சொல்லுவது இல்லையா, அது போல.

பொற் கையில் நீர் ஏற்று = தன்னுடைய பொன்னான கையால் நீர் ஏற்று (தானம் பெறுவதற்காக)

எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான் = எல்லா உலகத்தையும் அளந்து கொண்ட எம் பெருமான்

நல்லார்கள் வாழும் = நல்லவர்கள் வாழும்

நளிர் ரங்க நாக அணையான் = நளினமான பாம்பு அணையில்

இல்லாதோம் கைபொருளும் = ஒன்றும் இல்லாத எங்களின், கைப் பொருளும்

எய்துவான் ஒத்து உளானே = அதையும் எடுத்துக்கொண்டு போய் விடுவான் போல இருக்கே

2 comments:

  1. Kai Porul = why do you interpret at bangles? It could be any little thing in one's hand?

    ReplyDelete
  2. thodasa romance, thodasa contextual...:)
    Actually, there are series of songs...let me send the next one also...then it will give context

    ReplyDelete