திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.
ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள்.
தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்
தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இந்தப் பாடலில் கூறுகிறார் திருமூலர்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
கொஞ்சம் வரிகளை இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் புரியும்.
------------------------------------------------------------------------------
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
சொல்லிடின்
வான் பற்றி நின்ற மறை பொருள்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
---------------------------------------------------------------------------
நம் உடலுக்குள்ளே ஒரு மந்திரமானது உணர்வு வடிவில் உள்ளது. அதை சொல்லிடின், இந்த அகிலமெல்லாம் நிறைந்த அந்த மறை பொருள் நாம் பற்றிக் கொள்ளும் வகையில் தலைப்படும். அப்படி தனக்கு தலைப்பட்டதால் வந்த இன்பம் இந்த உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று விழைகிறார் திரு மூலர்.
அது என்ன மந்திரம் ? திருமூலர் சொல்லவில்லை. நம் உடலுக்குள் உணர்வாய் இருக்கும் மந்திரம் சொல்லச் சொல்ல இந்த உலகமெல்லாம் நிறைந்த அந்த மந்திரமும் கை வசப் படும் என்கிறார் திருமூலர்.
இதற்கு மேல் அவர் ஒன்றும் சொல்லவில்லை. உரை எழுதுபவர்கள் தங்களுக்கு தோன்றியதை எழுகிறார்கள்.
மந்திரத்தை என்னவென்று சொல்லி இருக்கலாம்....ஹ்ம்ம்ம்....
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையக-just know this line.Today only reading the full poem.Thanks for uploading many poems.
ReplyDeleteSRU
அது சொல்லால் ஆன மந்திரமல்ல. 'நான்' 'நான்' என்று நமக்குள்ளே எப்போதும் அதிர்ந்துகொண்டிருக்கும் உணர்வுத் துடிப்பு.
ReplyDeleteஅதை எப்படி பயன்படுத்துவது
Deleteஆம் அதுவே நான்.
Deleteவிளக்கம் அருமை.
ReplyDeleteநமசிவாய என்பதே மந்திரம்!
ReplyDeleteஅஹம் ப்ரமாஸ்மி. நான் பிரம்மமாய் இருக்கிறேன்.
Deleteயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். என்று சொல்கிறார் முதல் வரியில்.
ReplyDeleteஅடுத்த வரியில் கேள்வி கேட்கிறார்
வான் பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின் ? நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களும் இந்த உடலிலும் உள்ளது .அதில் ஆகாயமாக இருக்கும் மறைபொருளைச் சொன்னால் என்ன ஆகும்?
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
இந்த உடலில் ஆகாயமாக இருக்கக்கூடிய உணர்வுள்ள மந்திரமாக உள்ளது.
தான் பற்ற பற்ற தேவைப்படும் தானே
அதைப் பற்றினால் அனைத்தும் தானாக தெரிய வரும் என்பது இந்த பாடலின் விளக்கம். இந்த ஆகாயமாக உடலில் என்ன இருக்கிறது என்பதற்கு முதலில் நிலம் நீர் நெருப்பு காற்றாக என்ன உள்ளது என்று அறிய வேண்டும்.சித்தர்கள் ஒன்றைச் சொல்கிறார்கள் என்றால் ஒன்றை மட்டும் அல்ல ஒன்றைச் சொல்லி மற்றவற்றையும் தெரிந்து கொள் என்கிறார்கள். சித்தர்களின் பரிபாஷை புரிய வேண்டுமானால் பாம்பின் கால் பாம்பறிய வேண்டும்.
அருமை ஐயா.
Deleteதான் பற்ற பற்ற...
ஐம்பூதங்களும் தன்னுள் அடக்கியுள்ளதை தெளிந்து உணர்ந்து பற்றும் போது...
பிரபஞ்ச ரகசியம் நமக்கு எட்டும்
என திருமூலர் பெருமான் அருள்கிறார்.
உணர்வுருமந்திரம் சித்தர் பரிபாசைப்படி தொட்டால் சீரும் மந்திரம்....இந்த உடம்பில் ஆகாயமாக இந்த மனம் உள்ளது, இந்த மனம் விலகும்போது அங்கே ஜோதியாய் சிவனிருப்பார்.. அவர் எங்கிருப்பார் என்றால் உதய கணேஷ் படமாக சொல்லியுள்ளார்
ReplyDeleteஅருமை ஐயா!!! 😊🙏🙏
Deleteஆம் அதுவே நான்.
Deleteகாற்றுள்ள போதே அதனை தூற்றிக் கொள்ள வேண்டும்..
ReplyDeleteஅது 'ஓம்' என்னும் மந்திரம்
ReplyDeleteநமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமே
ReplyDeleteஉள்ளே உள்ளே சரி செய்ய செய்ய தான்பெற்ற இன்பம் பெறலாம் என்கிறார். அதாவது அதாவது அவன் உறை பொருள் அறிய இதுவே நுழைவாயில் என்கிறார்
ReplyDeleteவான் உறை என படிக்கவும்
Deleteதான் பஞ்சபூதங்கள் அடங்கிய தொகுப்பு என்பதை உணர்ந்து பெற்ற இன்பம் அனைவருக்கும் பெற தன் தெளிவை விளக்குகிறார் ஐயன் திருமூலர் பெருமான்.தான் என்பது நான் அல்ல.இது ஒரு தொகுப்பு என்பதை தெளிந்து பின்பற்ற பின்பற்ற தம்முள் பேரானந்தம் பெறலாம் என்பது ஐயன் கூற்று.
ReplyDeleteTat Tvam Asi
ReplyDeleteWe are THAT.
ஆம் அதுவே நான்.
Deleteஅஹம் ப்ரமாஸ்மி.
Deleteஇன்பத்தை கொண்டாடகூடாது பகிரவேண்டும்
ReplyDeleteசிவயநம சித்தனைஅறியசித்தனாய்இறு
ReplyDeleteயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமந்திர பாடலுக்கு மரு.நந்தகோபால் அவர்கள் அறிவியல் பூர்வமாக இப்படி பொருள் தந்தார்
ReplyDeleteயாம் என்ற சொல்லுக்கு இலக்கணத்தில் விதி என்று பொருள் தருகிறது
வான் பற்றி நின்ற மறை பொருள் - வானை பற்றி நிற்பது மனிதன் இனம் மட்டுமே முதுகு தண்டுவடம் தான் வான் பற்றி நிற்கிறது அதை ஆதாரமாக கொண்டு தான் இயங்குகிறான்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் - விளா எழும்பு சதைகள் ஊன் பற்றி நிற்கிறது .இதை உணரதான் முடியும் படிக்க முடியாது
தான்பற்றப் பற்ற தலைப்படுந் தானே - இந்த விளா எழும்பில் 360 ரசாயணங்கள் இயங்குகிறது இதை படித்தால் இந்த பிரபஞ்சத்தை படித்து விடலாம் தமிழ் மருத்துவ விஞ்ஞானம் தண்டு வடத்தை அடிப்படையாக கொண்டது. இந்த மனிதனின் தண்டு வடம் தான் பிரபஞ்ச ஆண்டனா என்கிறார்.
NAMASIVAYA, SIVAYANAMA, SIVAYA SIVA, SIVA, SI. THIS IS THAT MANTHIRAM OF THIRUMOOLAR.
ReplyDeleteமிக அருமையான விளக்கம்.
ReplyDeleteSivayasiva
ReplyDelete