Thursday, April 26, 2012

திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை


திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை

உண்மை என்பது ஒன்றானதா ? அல்லது பலவானதா ? இன்று நாம் உண்மை என்று நினைப்பது நாளை மாறலாம் இல்லையா ? என்றுமே மாறாத உண்மை என்று ஒன்று இருக்கிறதா ?

இருக்கிறது என்கிறார் மணி வாசகர் இந்தப் பாடலில்


வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே.
---------------------------------------------------------------------------------------------------------------------

வணங்கும் நின்னை = உன்னை வணங்கும்

மண்ணும் = இந்த மண்ணினல் உள்ள மனிதர்களும்

விண்ணும் = அந்த விண்ணில் உள்ள தேவர்களும்

வேதம் நான்கும் = நான்கு வேதங்களும்

ஓலம் இட்டு = உன்னை முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்

உணங்கும் = வாடி நிற்கும்

நின்னை எய்தல் உற்று = உன்னை அடைய முடியாமல்

மற்று ஓர் உண்மை இன்மையின் = உன்னை தவிர வேறு ஒரு உண்மை இல்லாததால்

வணங்கியாம் = நாம் உன்னை வணங்கி

விடேங்கள் என்ன = விட மாட்டோம் என்று

வந்து நின்று = வந்து நின்று விட்டோம்

அருளுதற்கு = எங்களுக்கு அருள் தருவதற்கு

இணங்கு = இணைந்த

கொங்கை = மார்பகங்களை கொண்ட

மங்கை பங்க = மங்கையை பாகமாக கொண்டவனே

என் கொலோ நினைப்பதே. = என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் ? (என்ன திருவுளமோ ?)




2 comments:

  1. "உன்னை அடைவதே உண்மை, அதைத் தவிர வேறு இல்லை" என்கிறாரா? கடவுள்தான் உண்மை என்று பல பேர் எழுதி இருக்கிறார்கள். அதில் இவரும் ஒருவர்.

    ReplyDelete
  2. பக்தி இலக்கியங்களில் கொங்கை முலை போன்ற வார்த்தைகள் தாராளமாக பயன்படுத்தப்படுவது சங்கடமாக இருக்கிறது. பெரியவர்கள் இதை ஏன் தவிர்திருக்கக் கூடாது ? பெண் உடல் என்றால் முலை கொங்கை மட்டும் தானா ?

    ReplyDelete