Tuesday, April 10, 2012

கந்தர் அலங்காரம் - Quality Stamp


முருகனுக்கு பல பெயர்கள் உண்டு.

அதில் கந்தன் என்று பெயர் மிகச் சிறப்பு வாய்ந்தது.

ஏறக் குறைய அனைத்து முருகன் பற்றிய இலக்கியங்களும் கந்தன் பெயரிலே அமைந்துள்ளன.

கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலி வெண்பா, கந்த புராணம், கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், என்று பல நூல்கள் கந்தன் என்ற பெயரிலேயே அமைந்துள்ளன.

கந்தர் அலங்காரம்.

கந்தனை அலங்காரம் பண்ணிப் பார்க்கும் பாடல்கள். அதில் இருந்து ஒரு இனிய பாடல் .....


-----------------------------------------------------------
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன் சிற்றடியே
--------------------------------------------------------
அப்படினா என்ன அர்த்தம் ?

தாவடி =தா + அடி = தாவி வரும் அடி. அடியவர்கள் துயரை துடைக்க தாவிவரும் அடி. முருகன் திருவடி.

அது உலகத்தில் மூன்று இடத்தில் படிந்தது.

எங்கு எல்லாம் ?

மயிலும் = அவன் வாகனமான மயில் மேல்

தேவர் தலையிலும் = தேவர்களின் தலை மேலும்

என் பாவடி ஏட்டிலும் = என்னுடைய (அருணகிரிநாதர் ) பாடல் எழுதப்பட்ட ஏட்டிலும்

பட்டது அன்றோ = பட்டது.

எது பட்டது ?

படி மாவலிபால் = மகாபலி சக்ரவர்த்தியிடம்

மூவடி = மூன்று அடி (நிலம் )
கேட்ட = கேட்டு
அன்று = அன்று
மூதண்ட = மூன்று அண்டங்களையும்
கூடி = சேர்ந்து
முகடு முட்ட = அனைத்துக்கும் மேலாக

சேவடி = செம்மையான அடி, சிவந்த அடி
நீட்டும் = நீட்டிய, அளந்த
பெருமான் = பெருமாள், விஷ்ணு
மருகன் = மருமகன்
சிற்றடியே = சின்ன திருவடியே


முருகன் திருவடி மயில் மேலும், தேவர்கள் தலை மேலும், அருணகிரி நாதர் எழுதிய பாடல்கள் மேலும் பட்டது.
அது எப்பேர்பட்ட திருவடி தெரியுமா?


4 comments:

  1. Nice one. But why did you call it Quality Stamp?

    ReplyDelete
  2. Murugan puts his feet on high quality stuff....Devar's head, his pea cock and Arunagiri Naathar's songs. It has to be something special for Muruga to put his feet on top of it....

    ReplyDelete
  3. இதைக் படித்தவுடன் கந்தன் என்றால் என்ன அர்த்தம் எனக் கேள்வி எழுந்தது......கூகூள் கடவுளின் படி...
    "கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்"

    ReplyDelete