Sunday, April 8, 2012

திருவாசகம் - மாணிக்கவாசகரின் வருத்தம்

வாழ்க்கைல நாம எதுக்கு அச்சப்படுவோம் ? எதுக்கு வருத்தப் படுவோம் ?


நமக்கு வேண்டியவங்களுக்கு உடம்பு சரி இல்லேனா, போட்ட முதல் ஊத்திக்குமோ என்று சந்தேகம் வரும் போது, பிள்ளைங்க படிக்கனுமே என்று, அதுகளுக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணுமே என்று, அவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கணுமே என்று, நம்ம வேலை போயிற கூடாதே என்று, சில சமயம் சாவை கண்டு ... இப்படி பல வருத்தம் / அச்சம் நமக்கு இருக்கு


மாணிக்க வாசகருக்கு என்ன வருத்தம்/அச்சம் பாருங்க





 ----------------------------------------------------------
யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமானெம்
மானேயுன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே
----------------------------------------------------------

எளிய பாடல் தான். கொஞ்சம் பதம் பிரித்தால் இன்னும் நல்லா விளங்கும்.

----------------------------------------------------------
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பதற்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்தும் இரேன்
தேனேயும் மலர் கொன்றை சிவனே எம் பெருமானே எம்
மானே உன் அருள் பெறு நாள் என்று என்றே வருந்துவனே
----------------------------------------------------------

பொருள்:

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் = மீண்டும் வந்து பிறப்பதற்கு கூட அஞ்ச மாட்டேன்

இறப்பதற்கு என் கடவேன் = இறப்பதானாலும் அது என் கடமை என்று இருப்பேன்

வானேயும் பெறில் வேண்டேன் = பொருள் மேல எல்லாம் எனக்கு பற்று இல்லை. அதனால் அது வருமோ, இருப்பது போய் விடுமோ என்ற பயமும் இல்லை. சொர்கமே கிடைத்தாலும் எனக்கு வேண்டாம்.

மண்ணாள்வான் மதித்தும் இரேன் = அதிகாரிகள், அரசன் யார் மேலும் எனக்கு பயம் இல்லை.

தேனேயும் மலர் கொன்றை = தேன் நிறைந்த கொன்றை மலரை சூடிய

சிவனே எம் பெருமானே எம் = சிவனே, எம் பெருமானே, என்னுடைய

மானே = அம்மானே

உன் அருள் பெறு நாள் என்று என்றே வருந்துவனே = உன்னுடைய அருளை பெறும்நாள் எது என்றே வருந்துவேன். எனக்கு வேறு எந்த கவலையும் இல்லை.

2 comments:

  1. Aha, what amazing sentiment! I was reminded of the story of Manickavasagar becoming the minister and spending the money on building the temple! No wonder!

    ReplyDelete