Monday, April 9, 2012

தேவாரம் - திருநாவுக்கரசரின் வெட்கம்


கோவிலுக்கு போவது, சாமி கும்பிடுவது எல்லாம் சரிதான்...எப்பவாவது ஏதாவது துன்பம் வந்து விட்டால், "இந்த சாமின்னு ஒண்ணு இருக்கா ? நான் எவ்வளவு கும்பிட்டு இருப்பேன், எனக்கு போய் இப்படி ஒரு துன்பத்தை தந்துருச்சே அந்த சாமி, அவ்வளவும் வேஸ்ட்" என்று ஒரு நொடியில் பக்தி போய்விடும். 

பக்தர்கள் போல நடிப்பது, இப்படி எல்லாம் செய்தேன்...என்று திருவாவுக்கரசர் சொல்கிறார்.

இறைவா, உனக்கு தெரியாதா எது உண்மை, எது பொய்னு, நான் செஞ்சதை எல்லாம் நினைத்து விலா நோகச் சிரித்தேன் என்கிறார் நாவுக்கரசர்.

அந்த இனிய தேவாரப் பாடல்.......


--------------------------------------------------------------------------
கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே
------------------------------------------------------------------------
கள்ளனேன் = கள்வனாகிய நான்

கள்ளத் தொண்டாய்க் = உண்மையான தொண்டு செய்யவவில்லை. ஏதோ பேருக்கு 
செய்வது, பிரதி உபகாரம் நினைத்து செய்வது போன்ற கள்ளத் தொண்டினை செய்தேன்

காலத்தைக் கழித்தே போக்கி = என் வாழ்நாள் எல்லாம் இப்படியே வீணாகிப் போனது

தெள்ளியனாகி நின்று தேடினேன் = மனம் தெளிவு பெற்று தேடினேன்

நாடிக் கண்டேன் = கடைசியில் கண்டு கொண்டேன்

உள்குவார் = நினைப்பவர்

உள்கிற்றெல்லாம் = என்ன நினைகிரார்களோ

உடனிருந்து அறிதி என்று = நீ அவங்க கூடவே இருந்து அதை எல்லாம் அறிவாய்

வெள்கினேன் = வெட்கப் பட்டேன்

வெள்கலோடும் = வெட்கத்தோடு

விலாவிறச் சிரித்திட்டேனே = விலா ஒடிய சிரித்தேன்






நம்ம என்ன நினைக்கிறோம் என்று கடவுளுக்குத் தெரியாதா ? நம்ம நினைக்றதும், சொல்றதும், செய்றதும் இதை எல்லாம் அவன் அறிவான் என்று அறிந்த போது, என்னை நானே நினைத்து விலா நோகச் சிரித்தேன்....

2 comments:

  1. Nice point.

    When we are in some trouble, we pray fervently. And when we don't get what we want, we feel disappointed with god. Both are crazy.

    Then what is the right way to approach god?!

    ReplyDelete
  2. Absolute surrender.
    நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!

    ReplyDelete