ஒரு ஆணின் அழகை ஒரு பெண் இரசிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.
ஒரு ஆணின் அழகை இன்னொரு ஆண் விரும்புவது என்றால் அவன் எவ்வளவு அழகாய் இருக்க வேண்டும்.
இராமனின் பின்னால் சென்ற விஸ்வாமித்திரன், இராமனின் அழகைப் பார்த்து, வியக்கிறான், இவனின் அழகைப் பார்த்தால் ஆண்கள் எல்லாம் நாம் பெண்ணாய் பிறக்கவில்லையே என்று நினைப்பார்களாம்.....
அந்தப் பாடல்
சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே
கையில் சூலத்துடன் பாம்பையும் அணிபவள்,
காட்டில் உறைபவள், இந்த கொடியவள் பெயர் தாடகை என்பது என்று விஸ்வாமித்திரன் இராமனிடம்
சொல்கிறான்.
சூடக
= கையில் அணியும் வளையல்
அரவு = பாம்பு
உறழ் சூலக் கையினள் = கையில் எப்போதும்
சுழன்று கொண்டு இருக்கும் சூலம்
காடு உறை வாழ்க்கையள் = காட்டிலேயே
இருப்பவள்
கண்ணின் காண்பரேல் = கண்ணால்
பார்த்தால்
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் =
ஆண்களும் பெண்மையை விரும்பும் தோளினாய்
(இராமனே )
‘’தாடகை’’ என்பது = தாடகை என்பது
அச் சழக்கி நாமமே = அந்த கொடியவள்
பெயர்
No comments:
Post a Comment