Monday, April 16, 2012

திரு அருட்பா - குடத்தில் அடங்கும் கடல்

திரு அருட்பா - குடத்தில் அடங்கும் கடல்



அன்பே சிவம்.

இறைவனை பக்தியால், அன்பால் எளிதாக அடைய முடியும் என்கிறார் வள்ளலார். அன்பின் பெருமையை சொல்ல வந்த வள்ளலார்....




அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிரொளிர் அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே



அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே = மலையை உள்ளங் கையில் அடக்க முடியுமா? மலை போன்ற பெரிய இறைவன் ஒரு கைப் பிடிக்குள் அகப்படுவான்

அன்பெனும் குடில்புகும் அரசே = மாட மாளிகை தேவை இல்லை. அன்பு இருக்கும் குடிசைக்குள் அவனே சென்று புகுவான்

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே = அன்பெனும் வலை வீசினால் அதில் அகப்படும் பரம் பொருள் அவன்

அன்பெனும் கரத்தமர் அமுதே = அன்பு என்பது உங்கள் கையாய் இருந்தால், அந்த கரத்தில் வந்து அமரும் அமுது இறைவன்

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே = அன்பெனும் குடத்துள் அடங்கும் கடல் அவன்

அன்பெனும் உயிரொளிர் அறிவே = அன்பெனும் உயிர் ஒளிர் அறிவு

அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே = அந்த அன்பு மிகச் சிரியாதாய் இருந்தாலும் அதில் வந்து அடங்கும் பேரொளி இறைவன்

அன்புரு வாம்பர சிவமே = பர சிவம் அன்புருவானவன்




3 comments:

  1. ஆதி சங்கரரும் பக்தி என்ன செய்யும் என்ற கேள்விக்கு பக்தி என்ன செய்யாது என்று பதில் அளிக்கிறார்.
    கடவுள், கண்ணப்பன் என்ற வேடன் வாயில் வைத்து கொண்டு வந்த நீரை அபிஷேகதுக்குரிய புனித நீராகவும், எச்சில் செய்த மாமிசத்துண்டை அப்பொழுது செய்த நைவேத்யமாகவும் ஏற்று வேடனை கண்ணப்ப நாயனாராக உயர்த்தியது அந்த பக்தியால் தானே என்று கூறி நம் பக்தி கடவுள் இடம் எப்படி இருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார் :- ஆன்கோலா என்ற பெரிய மரத்தின் விதை மரத்தின் கீழ் எங்கே விழுந்தாலும் உருண்டு ஓடி மரத்தின் வேருடன் ஒட்டி கொண்டு விடுமாம். அதை போல் நாம் என்ன செய்தாலும் மனம் கடவுள் பால் ஈடு கொண்டு இருக்க வேண்டுமாம் .

    ReplyDelete
  2. நல்ல பாடல். இறைவனை அடைவது நல்லது. ஆனால் அன்பு மனிதர்க்கு என்ன செய்யும் என்பதற்க்கு ஏதாவது பாடல் உண்டா?

    ReplyDelete
  3. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு.

    ReplyDelete