Monday, April 30, 2012

கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்


கம்ப இராமாயணம் - வஞ்ச மகள் வந்தாள்



கம்பனின் வார்த்தை விளையாட்டுக்கு கீழ் வரும் பாடல் ஒரு உதாரணம்.

தன் அரக்கி வடிவத்தை மறைத்து கொண்டு, அழகான பெண் போல உருக் கொண்டு சூர்பனகை வருகிறாள்.

கம்பனின் பாட்டு கொஞ்சுகிறது.



பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.

சூர்பனகையின் பாதம் நடந்து நடந்து வருந்துகிறது

அது எவ்வளவு மெல்லிய பாதம் தெரியுமா?


பஞ்சி = பஞ்சு போன்ற

ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க = பல்லவம் அப்படினா தளிர்.அனுங்க என்றால் வருந்த. குளிர்ச்சியான தளிர்கள் வருந்தும் படி. ஒளி விட்டு விளங்கக்கூடிய , குளிர்ச்சியான தளிர்களை விட (விஞ்ச) மென்மையான பாதம் வருந்த

செஞ் செவிய = செக்க சிவந்த

கஞ்சம் நிகர் = தாமரை மலருக்கு நிகரான

சீறடியள் ஆகி = சிறிய அடி. சிறப்பான அடி. மெல்ல மெல்ல அடி எடுத்து வந்ததால் சிற்றடி

அம் சொல் இள மஞ்ஞை என = இனிமையாக அகவும் மயில் போல

அன்னம் என = மென்மையான அன்னம் போல

மின்னும் வஞ்சி என = மின்னும் வஞ்சிக் கொடி போல

நஞ்சம் என = விஷம் போல

வஞ்ச மகள் வந்தாள் = வஞ்சனையாக அந்தப் பெண் வந்தாள்

பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் இருக்கிறது. ஆனால், நிஜம் இல்லை. வஞ்ச மகள் வந்தாள். 

12 comments:

  1. நன்று. நன்றி!

    (இது எப்படி இருக்கு? சும்மா கம்பர் எழுதின பாதிரி இல்லை?!)

    ReplyDelete
    Replies
    1. பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்க
      செஞ்செவிய கஞ்சநிகர் சீறடிய லாகியமிள
      மஞ்சையென அன்னமென மின்னும் வஞ்சியென
      நஞ்சமென வஞ்சிமகள் வந்தாள்

      Delete
  2. kambar will be turning in his grave...:)

    ReplyDelete
  3. கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவிபாடும்

    ReplyDelete
    Replies
    1. Woah nice I studied this in my bk

      Delete
  4. மிகவும் சிறப்பு!⭐

    ReplyDelete
  5. கம்பனைப் போல்
    ஒருகவிஞன்
    கண்டதுண்டோ
    உலகில்..?
    -விசூரார்.
    இலயே




    இல்லையே
    இன்னும்


    இல்லையே......



    ReplyDelete
  6. I am searching for a line where beauty of sita is described as a beautiful poem does anybody know about it

    ReplyDelete
  7. Nice explanation it shows the poems beauty

    ReplyDelete