கம்ப இராமாயணம் - சீதை கேட்ட வரம்
அசோகவனத்தில் அனுமன் சீதையை கண்டான். அப்போது, அனுமன் மூலம் சீதை இராமனிடம் ஒரு வரம் கேட்கிறாள்.
நான் ஒரு வேளை இந்த அசோகவனத்திலேயே இறந்து விட்டால், மீண்டும் பிறந்து வந்து இராமனின் திரு மேனியை தீண்டும் வரம் சீதை தொழுது வேண்டினாள் என்று இராமனிடம் சொல்லுவாய் என்றாள்.
இராமன் திருமேனி எப்படி பட்டது?....சீதையே சொல்லுகிறாள்....
--------------------------------------------
ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம்
வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம்
வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய்
--------------------------------------------
கம்பன் வார்த்தைகளை அனுபவித்து எழுதுகிறான். ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு சுவை.
ஈண்டு = இங்கு, இந்த அசோகா வனத்தில்
நானிருந் தின்னுயிர் மாயினும் = நான் இருந்து இன்னுயிர் மாயினும். "இருந்து" , ஒருவேளை திரும்பி வராமல், இங்கேயே இருந்து என்று அர்த்தம்
மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் = மீண்டு வந்து பிறந்து தன் மேனியை = மீண்டும் பிறந்து, இராமனின் மேனியை
தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் = தீண்டல் ஆவது ஓர் தீவினை தீர் வரம் = இராமனின் மேனியை தீண்டினால் , தீவினைகள் எல்லாம் தீர்ந்து விடும்.
வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய் = அதுவும் எப்படி கேட்டாள் ? "வேண்டினாள், தொழுது". கடவுளிடம் வேண்டுவது போல தொழுது வேண்டினாள்.
Why talk about touching the body instead of something else like "being his companion" etc?
ReplyDelete