Monday, April 9, 2012

கம்ப இராமாயணம் - அயோத்தியின் அழகு


அயோத்தி நகரம் அழகா இருக்கு அப்படின்னு சொல்லணும்.

அதை எப்படி அழகா சொல்லுவது.


சிவனும், விஷ்ணுவும், பிரம்மனும் அயோத்தி போல் வேறொரு நகரம் இருக்கிறதா என்று தேடித் பார்த்தும் காண முடியவில்லையாம்.

அந்த நகரம் போல் அயோத்தி இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அப்படி ஒரு நகரம் எங்கும் இல்லையாம்.

எங்கும் என்றால் இந்த பூமியில் மட்டும் இல்லை, வேறு எந்த உலகத்திலும் இல்லை.

நல்லா தேடி பார்த்தியா என்றால், தேடினது சிவன், விஷ்ணு , பிரம்மன்.

அவர்களுக்கு தெரியாததா எது எங்க இருக்கும் என்று. அவர்களாலேயே கண்டு பிடிக்க முடியவில்லையாம்.

அப்படி என்றால் அயோத்தியை விட சிறந்த நகரம் இல்லை என்பது நம்மகுத் தெரிகிறது.

அது மட்டும் அல்ல, இந்த சூரியனும், சந்திரனும், கண் இமைக்காமல் அப்படி ஒரு நகரம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டே இருக்கிறார்களாம்....

கற்பனையின் உச்சமான அந்தப் பாடல்

--------------------------------------------------------------------------------------------------
உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்புஅருங் காதல் அதுபிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு இயம்பல்ஆம் ஏதுமற்றுயாதோ
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், = உமையாளுக்கு தன் ஒரு பாகத்தை கொடுத்தவனும் (சிவன் )

இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், = சீதேவையையும் , பூதேவியையும் மனந்தவனும் (விஷ்ணு)

மலர்மேல் கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், = (தாமரை) மலர் மேல் அமைந்த கடவுளும் (பிரம்மன்)

உவமை கண்டிலா நகர்அது = (இந்த அயோத்தி மாநகருக்கு ) உவமை காண முடியாத நகரம் அது

காண்பான் = அப்படி ஒரு நகரத்தை காண வேண்டி

அமைப்புஅருங் காதல் = அமைந்த அருமையான காதலால்

அதுபிடித்து உந்த, = காதல் பிடித்து உந்த

அந்தரம், = அந்தரத்தில் இருக்கும்

சந்திராதித்தர் = சந்திர + ஆதித்தர் - சந்திரனும், சூரியனும்

இமைப்பு இலர் திரிவர்; = கண் இம்மைக்காமல் திரிகின்றார்கள்

இது அலால் = இதைத் தவிர

அதனுக்கு இயம்பல் = அதைப் பற்றி சொல்ல

ஆம் ஏதுமற்றுயாதோ = வேற என்ன இருக்கு ?




1 comment:

  1. Very nice. Please check the spelling again before you publish. Sometimes there are mistakes in "irandu chuzhi" versus "moondru chuzhi" etc.

    ReplyDelete