நாம் ஒருவரிடம் ஒரு பொருளை கடன் வாங்கி இருந்தால், மறக்காமல் அதை திருப்பி கொடுபதற்காக எதையாவது அடமானம் வைப்போம்.
ஒரு செக்யூரிட்டி தான்.
பரதன், இராமனை நாட்டுக்கு திரும்பி வரச் சொல்லுகிறான்.
இராமன் மறுத்து பதினான்கு வருடம் கழித்து வருகிறேன் என்று சொல்கிறான்.
"சரி, அப்படியானால் மறக்காம இருக்க எதையாவது அடமானமாய் தா " என்று கேட்கிறான். இராமானும்
தன் பாதுகையை தருகிறான்.
------------------------------------------------------------------------------------------------------------------
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய் வானோர் வாழசெருவுடைய திசைக்கருமம்திருத்திவந்து உலகாண்ட திருமால்கோயில்திருவடிதன் திருவுருவும் திருமங்கை மலர்கண்ணும் காட்டி நின்றஉருவுடையமலர்நீலம் காற்றாட்ட ஓசலிக்கும் ஒளிய ரங்கமே
------------------------------------------------------------------------------------------------------
"மரவடியைத் தம்பிக்கு வான்பணையம் வைத்துப்போய்" ஏன் கானகம் போனான் ?
வானவர்கள் வாழ. இராவணன் அவர்களை பிடித்து அடித்து வைத்து படாத பாடு படுத்தினான். அவனிடம் இருந்து வானவர்களை காப்பாற்ற கானகம் போனான்.
"வானோர் வாழ செருவுடைய திசைக் கருமம் திருத்தி"
செரு = போர்.
தென் திசை சென்று, அங்கு செய்ய வேண்டிய கடமைகளை திருத்தமாக செய்து (கருமம் = கடமை ) அவற்றை செய்து முடித்து வந்து, இராமன் உலகை ஆண்டான்.
அவன் இருந்த கோயிலில் என்ன எல்லாம் பாக்கலாம் தெரியுமா ?
அவன் திருவடி
அவன் திரு உருவம்
தாயாரின் திரு உருவம் மற்றும்
அவளின் மலர் போன்ற கண்கள்
எந்த ஊர்ல இது எல்லாம் ?
நல்ல உருவமுடைய நீல மலர்கள் காற்றில் ஓளி வீசும் திருவரங்கம் பெரிய
ஆழ்வார் அருளிச் செய்த 412 ஆவது பாசுரம்.
Good comparison.Nanna iruku:-)
ReplyDeleteSRU