Thursday, April 12, 2012

கம்ப இராமயாணம் - இறைவனும் பக்தனும்





இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு மிக நுணுக்கமானது.

அதை அருகில் இருப்பவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாது. 

பக்தன் இறைவனை அறிவான்.

இறைவன் பக்தனை அறிவான்.

இதை பக்தன் வெளியே சொன்னாலும் மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பக்தனை விடுங்கள். இறைவனே சொன்னாலும் புரியாது.
 
இராமயணத்தில் ஒரு இடம். அனுமன் இராமனைப் பார்க்கிறான். அனுமனுக்கு இராமன் யார் என்று தெரிகிறது. இராமனுக்கும் அனுமனைப் புரிகிறது. ஆனால் அவர்கள் இடையே இருந்த லக்ஷ்மணனுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை.

அந்த இடம்.....

 
----------------------------------------------------------
மாணிஆம் படிவம் அன்றுமற்று இவன் வடிவம்மைந்த!
ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமைதன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன்பின்னர்க்
காணுதி மெய்ம்மைஎன்று, தம்பிக்குக் கழறிகண்ணன்,
-------------------------------------------------------------------------------------------
 
 
இராமன், லக்ஷ்மணனிடம் அனுமனைப் பற்றி சொல்கிறான்.
 
 
மாணிஆம் படிவம் அன்று = நீ பார்க்கிற இந்த மானிட வடிவம் இவன் (அனுமன்) அல்ல.
 
மற்று இவன் வடிவம் = இவனுடைய உண்மையான வடிவம் என்ன என்றால்
 
மைந்த! = மைந்தனே (லக்ஷ்மனனே)
 
ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் = இந்த உலகத்திற்கே

இவன் அச்சாணி போன்றவன் (ஆணி = அச்சாணி). ("உருவு
கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேருக்கு அச்சாணி அன்னதோர் உடைத்து" என்பது வள்ளுவர் வாக்கு. அப்படினா என்னனு ரேவதி கேக்குற அவங்க mind voice எனக்கு கேட்ட்ருச்சு.)
 
 
ஆற்றற்கு ஏற்ற = இவன் ஆற்றலுக்கு ஏற்ற
 
சேண் உயர் பெருமைதன்னைச் = இவனுடைய சிறந்த பெருமைகளை
 
சிக்கு அறத் தெளிந்தேன் = ஒரு சிக்கலும் இல்லாமல் தெளிவாக தெரிந்து கொண்டேன். (இறைவன் பக்தனை புரிந்து கொண்ட
இடம் )
 
பின்னர்க் காணுதி மெய்ம்மை' = உனக்கு இப்ப தெரியாது, பின்னாடி பாரு உண்மை என்னனு தெரியும்
 
என்று = என்று
 
தம்பிக்குக் = தம்பியாகிய லக்ஷ்மணனுக்கு
 
கழறி = இடித்து சொன்னான், அது தான் இங்க முக்கியமான இடம்.

அனுமனுக்கும் இராமனுக்கும் இடையே நடந்த எதுவும்
லக்ஷ்மணனுக்கு தெரியவில்லை.

இராமன் எடுத்துச் சொல்கிறான். அப்பவும் அவன் அறிந்து கொள்ளவில்லை. இராமனுக்கு சற்று எரிச்சல் வருகிறது. எனவே லக்ஷ்மணனிடம் இடித்து சொல்கிறான்.
 
 
கண்ணன் = அழகிய கண்களை உடையவன் (இராமன் )
 
 
லக்ஷ்மணன் கதியே அது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம் 


No comments:

Post a Comment