கும்ப கர்ணன் ஒரு இனிமையான பாத்திரம். அவனுக்கு நண்பர்கள் இருந்து
இருப்பார்களா ? அவனுக்கு மனைவி உண்டா ? பிள்ளைகள் உண்டா ? தெரியவில்லை. ஆனால்,
ரொம்ப நல்லவன் மாதிரிதான் தோன்றுகிறது.
இராவணனாவது மாற்றான் மனைவியை கவர்ந்தான். கும்பகர்ணன் அப்படி எந்த தவறும்
செய்யவில்லை. இராவணனுக்கு நல்லது எடுத்துச் சொன்னான். இடித்து கூட சொன்னான்
(பேசுவது மானம், இடை பேணுவது காமம், கூசுவது மானிடரை). இராவணன் கேட்கவில்லை.
அதற்காக விபீஷணன் மாதிரி இராவணனை விட்டுவிட்டு செல்லவில்லை.
கடைசி வரை போராடி உயிர் கொடுக்கிறான். "நான் இறந்த பிறகாவது சீதையையை விட்டு
விடு " என்று கெஞ்சுகிறான், இராவணனிடம்.
ரொம்ப அன்பு உள்ளவனாக அவனை காண்பிக்கிறான்
கம்பன். தவறே செய்தால் கூட, அண்ணனுக்காக உயிர் கொடுக்கிறான். அவனை திருத்த
நினைக்கிறான். விபீஷணன் மேல் அளவு கந்த காதல் வைத்து இருக்குகிறான்.
விபீஷணனை இராவணனிடம் இருந்து
காப்பாற்றும்படி இராமனிடம் வேண்டுகிறான். விபீஷணன், கும்ப கர்ணனை பார்க்க வந்த போது
"ஏன் தனியா வந்த, சீக்கிரம் போய் விடு, இராவணனால் உனக்கு ஏதாவது ஆபத்து வந்து
விடும் என்று ஆதங்கப் படுகிறான்".
யுத்த களம். முதன் முதலாக கும்ப கர்ணன் இராமனை பார்க்கிறான்.
என்ன சொல்லி இருப்பான் ?
மூன்று விஷயங்கள் சொல்கிறான் இராமனிடம்.....
அடுத்து வரும் blog - ல் பார்க்கலாம்
No comments:
Post a Comment