Saturday, April 7, 2012

கந்தர் அநுபூதி - வள்ளியின் பின் சென்ற வேலன்

பசங்களுக்கு பொண்ணு மேல ஒரு "கிக்" வந்துருச்சுனா அந்த பொண்ணுங்க பின்னாலேயே சுத்துவாங்க.
அந்த பொண்ணு எங்க போனாலும் அது பின்னாடியே போக வேண்டியது.
இவன் வீடு எங்கேயோ இருக்கும், அந்த பொண்ணு வீடு வேற எங்கேயோ இருக்கும்.
அந்த பொண்ணுக்காக வழிய மாத்தி அவ வீட்டு வழியா போவானுங்க.
அவ நிக்கிற பஸ் ஸ்டாண்ட்ல போய் நிப்பாணுக.
லைப்ரரிக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு அந்த பொண்ணு வீட்டுல போய் தண்ணி கேக்குறது....
இப்படி நிறைய நடக்கும்ல ... நாம கேள்வி பட்டு இருக்கோம்ல...
இப்படி தான் முருகன் வள்ளி பின்னால சுத்தினாராம்...கந்தர் அனுபூதியில் அருணகிரி நாதர் சொல்கிறார்
-------------------------------------------------------------------------------
வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே

--------------------------------------------------------------------------------
பதம் பிரித்த பின்

-----------------------------------------------------------------------------------
வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்
மனையோடு இயங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதனோடு திரிந்தவனே
------------------------------------------------------------------------------------







வினை ஓடவிடும் = நாம் செய்த வினைகளை ஓட விடும். அவை நம்மை விட்டு ஓடச் செய்யும்
திர்வேல் மறவேன் = எது ஓடச் செய்யும் ? கதிர்வேல். ஒளி வீசும் அந்த வேல். அந்த கதிர்வேலை மறக்க மாட்டேன்.

மனையோடு தியங்கி மயங்கிடவோ = மனையோடு இயங்கி மயங்கிடவோ = அப்படி கதிர்வேலை மறக்காமல் குடும்ப
வாழ்க்கையில் தப்பு தவறு ஏதும் செய்யாமல் இருந்து
சுனையோடு = சுனை என்றால் சின்ன நீர்த் தேக்கம். குளம். ஏரி போல. குளத்துப் பக்கம்.

அருவித் துறையோடு = அருவி பக்கம். துறை அப்படினா படித்துறை. ஆற்றில் இறங்கி குளிக்க படி அமைத்து இருப்பார்களே, அந்த படித்துறை பக்கம்

பசுந் தினையோடு = பசுமையான திணை புனம் உள்ள வயல் வெளிகளில்

இதணோடு திரிந்தவனே = இந்த பக்கம் எல்லாம் வள்ளியை கணக்கு பண்ணிக் கொண்டு திரிந்தவனே

முருகனை "திரிந்தவனே" அப்படினே சொல்றாரு.




Lovesu யாரை விட்டுது ?

1 comment:

  1. "Manaiyodu iyangi mayangidavo" sounds like a question to Murugan.

    Arunagiri is asking whether he should engage in a family life, or engage only in Muruga bhakti, I think. What do you say?

    ReplyDelete