திரு மந்திரம் - உடம்பு அழிந்தால் உயிர் அழியும்
சித்தர்கள் பொதுவாக இந்த ஊண் உடம்பை பெரிதாக மதித்ததில்லை. திரு மூலர் மட்டும் இதற்க்கு விதி விலக்காக இருக்கிறார்.
உடம்பை போற்றி பாது காக்க சொல்கிறார். உடம்பை வளர்பதன் மூலம் உயிரை வளர்க்க முடியும் என்கிறார் இந்தப் பாடலில்....
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் = உடம்பு அழிந்தால் உயிரும் அழியும்.
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் = உடம்பு அழிந்தால், உண்மையான ஞானத்தை அடைய முடியாது.
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே = உடம்பை வளர்ப்பது என்றால் நன்றாக மூக்கு பிடிக்க உணவு உண்டு எடை கூடுவது அல்ல. எது சரியான உணவு, அதை எவ்வளவு உண்ணலாம், என்ன உடற் பயிற்சி செய்யாலாம் என்று அறிந்து செய்வது. எனவே அதை "உபாயம்" என்றார்.
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.= அந்த உபாயத்தை அறிந்து, உடலை வளர்த்து, உயிரை வளர்த்தேன்
உண்மையை அறிய, தவம் செய்ய, இறுதியில் இறைவனை அறிய உடம்பு மிக மிக அவசியம் என்கிறார் திரு மூலர்.
A Very different view.
ReplyDeleteSRU
புத்தரும் அதைத் தான் செல்லுகிறார்
ReplyDelete