Sunday, April 22, 2012

திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


திருவாசகம் - சிவன் சுமந்த சுமைகள்


நாம் மட்டும் தானா சுமைகளை சுமக்கிறோம்? அந்த இறைவனையும் சுமக்க வைக்கிறோம்.

சிவன் சுமந்த சுமைகளை மாணிக்க வாசகர் எவ்வளவு அழகாக சொல்லுகிறார் இங்கே.




பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் = இறைவன் இசைக்கு இசைப்பவன். அவனை இசையாகவே ஆராதித்தவர்கள் பலர். பண் சுமந்த பாடல்களுக்கு அவன் பரிசு படைத்து அருளுவான்.

பெண்சுமந்த பாகத்தன் = அவன் பெண்ணை ஒரு புறம் சுமந்தவன்.

பெம்மான் பெருந்துறையான் = பெருந்துறை என்னும் ஊரில் உறைபவன்

விண்சுமந்த கீர்த்தி = வானளாவிய புகழ் கொண்டவன்

வியன்மண் டலத்தீசன் = அனைத்து உலகங்களுக்கும் அவன் தலைவன்

கண்சுமந்த நெற்றிக் கடவுள் = அவன் நெற்றியில் ஒரு கண் சுமந்தவன்


கலிமதுரை = மதுரையில்

மண்சுமந்து = மதுரை மண்ணை சுமந்து. மண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான்

கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு =கூலி கொண்டு. அந்த அரசனால் (கோ என்றால் அரசன்) முதுகில் பிரம்பால் அடி கொண்டு

புண்சுமந்த பொன்மேனி = அதனால் புண் உண்டாகி, அந்த புண்ணை சுமந்த பொன் போன்ற மேனியை

பாடுதுங்காண் அம்மானாய். = பாடுவோம்

அம்மானை என்பது பெண்கள் சின்ன சின்ன கற்களை வைத்து தூக்கி போட்டு பிடித்து விளையாடும் ஒரு விளையாட்டு



1 comment:

  1. நல்ல சந்தம். நல்ல பொருளும் கூட.

    ReplyDelete