கம்ப இராமாயணம் - ஐயோ ! என்னே இவன் அழகு !
இராமனின் அழகை வருணிக்க முடியாமல் திணறுகிறான் கம்பன்.
வெய்யோனொளி தன்மேனியி(ன்)
விரிசோதியி(ன்) மறையப்
பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ
குடையான்
---------------------------------------------------------------------------------------------
பதம் பிரித்தால் கொஞ்சம் விளங்கும்....
-------------------------------------------------------------------------------------------------------
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய
பொய்யோ எனும் இடையாளோடும் இளையானோடும் போனான்
மையோ மரகதமோ மறி கடலோ மழை முகிலோ
ஐயோ இவன் வடிவென்பது ஓர் அழியா அழகுடையான்
-----------------------------------------------------------------------------------------------------
வெய்யோன் ஒளி = சூரியனின் ஒளி
தன் மேனியின் = இராமனின் மேனியில் இருந்து வரும்
விரி சோதியின் மறைய = விரிகின்ற ஜோதியில் மறைய (விரி சோதி - வினைத்தொகை)
பொய்யோ எனும் இடையாளோடும் = சீதைக்கு இடுப்பு ஒன்று இருக்கிறதா இல்லையா... அது பொய்யா நிஜமா என்று தோன்றும் அளவுக்கு உள்ள இடையாளோடும்
இளையானோடும் போனான் = இளைய பெருமாளான லக்ஷ்மணன் உடன் போனான்
மையோ = அவன் நிறம் மை போன்ற கருமையோ ?
மரகதமோ = மரகத மணி போன்ற பச்சை நிறமோ?
மறி கடலோ = கடல் போல நீலமோ ?
மழை முகிலோ = மழை மேகம் போல் கருப்போ?
ஐயோ = ஐயோ எப்படி சொல்லுவது?
இவன் வடிவென்பது = இவன் வடிவழகு என்பது
ஓர் அழியா அழகுடையான் = எப்போதும் அழியாத அழகு உடையவன்
நான் இந்த பாடலைப் பல முறை கேட்டு இருக்கிறேன். என்ன அருமையான பாட்டு! ஆஹா!
ReplyDeleteஐயோ, என்ன ஒரு அருமையான பாட்டு இது !
Deleteஇனி ஒரு கம்பன் பிறப்பானா
Deleteகம்பனுக்கு நிகர் கம்பனே
ReplyDeleteஇந்த பாடலை தினம் குறைந்தது 2 முறையாவது சொல்கிறேன்... கம்பன் வாழ்க!!! உங்கள் பணி அருமை!!! நன்றி....
ReplyDeleteஅருமை இவ் உவமை
ReplyDeleteஎன்னே நம் கம்பனின்
புலமை!
அடியேன் கம்பன் அவதரித்த மண்ணில் பிறக்கும் பேறு பெற்றதால் பெருமை கொள்கிறேன்.
ReplyDeleteகம்பன் பிறந்த மாவட்டத்தில் நானும் பிந்திருக்கிறேன் என்ற பெருமை
ReplyDeleteஎனக்கு
பன்னீர்செல்வம் குருவிக்கரம்பை
ReplyDeleteகம்பன் தமிழுக்கு அடிபணிகிறேன். அருமை யான உவமை. ஸ்ரீராம்
ReplyDeleteஒரு விதத்தில் இந்த பாடல் சிரிப்பைத் தருகிறது....
ReplyDeleteஏன் என்ற காரணம் தெரியவும்
இதன் சுவைகளைப் பற்றி பேசவும்
9677646720 என் அலைபேசி க்கு அழைக்கவும்