Monday, April 16, 2012

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்


திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்


திருவாசகத்தில் 'பிடித்த பத்து' என்று பத்து பாடல்கள் மாணிக்க வாசகர் அருளிச் செய்திருக்கிறார். அதில் இருந்து ஒரு மிக மிக இனிய பாடல். 




-------------------------------------------------------------------------------------------------------
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
------------------------------------------------------------------------------------------------

பால் நினைந்து ஊட்டும் = குழந்தை பசித்து அழுவதற்கு முன்னால், ஐயோ, குழந்தைக்கு பசிக்குமே என்று நினைத்து அது அழு முன்பே பால் தரும்.

தாயினும் சாலப் பரிந்து = தாயை விட மிகப் பரிந்து. தாய் எப்படி குழந்தை அழுமுன் நினைந்து அதற்கு அமுது அளிக்கிறாலோ, அது போல ஆண்டவனும் நமக்கு நாம் கேட்காமலேயே நமக்கு தருவான் என்பது கருத்து

நீ = சிவ பெருமானாகிய நீ

பாவியேனுடைய = பாவியாகிய என் 

ஊனினை உருக்கி = உடம்பை உருக்கி

உள்ளொளி பெருக்கி = உள்ளத்தில் ஞான ஒளியை பெருக்கி

உலப்பிலா = எல்லை இல்லாத 

ஆனந்த மாய தேனினை சொரிந்து = ஆனந்தமான தேனினை அளித்து 

புறம்புறந் திரிந்த = இறைவனே, நீ எங்கேயோ இருக்கிறாய் என்று எங்கெல்லாமோ தேடினேன்

செல்வமே சிவபெரு மானே = என் செல்வமான சிவ பெருமானே

யானுனைத் தொடர்ந்து = நான் உன்னை தொடர்ந்து வந்து 

சிக்கெனப் பிடித்தேன் = சிக்கென்று பிடித்தேன் 

எங்கெழுந் தருளுவ தினியே = இனி நீ எங்கு எழுந்து அருளுவாய் ?

தாய் தரும் பாலினால் உடல் உரம் ஏறும். 

இறைவனின் கருணையால் உடல் மெலியும் (ஊனினை உருக்கி). அப்படினா ரொம்ப மெலிந்து weak ஆ போயிருவோமா ? என்ற எண்ணம் வரலாம். அப்படி அல்ல. 

உடல் மெலிந்தாலும், உள்ளொளி பெருகும், ஆனந்தம் மேலிடும் (ஆனதமான தேனினை சொரிந்து)




2 comments:

  1. இந்த பாடல் திருவாதவூர் கொவிலில் எழுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். நல்ல பாடல்.

    ReplyDelete
  2. பாடல் எண்

    ReplyDelete