கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் நகைச்சுவை
கும்பகர்ணனுக்கு
நகைச்சுவை உணர்வு இருக்குமா ? கிண்டலும்
கேலிப் பேச்சும் அவனுக்கு வருமா ?
வரும் என்று கம்பன் காட்டுகிறான்.
யுத்தத்துக்கு போவதற்கு முன்னால் கும்பகர்ணன், இராவணனிடம் சொல்கிறான்.
"இராவணா, நமக்கு என்ன குறை இருக்கிறது ? காலினால் கடலை கடந்த அனுமன் இருக்கிறான், சிறை விட்டு செல்லாத சீதை இருக்கிறாள், வாலியின் மார்பு துளைத்த இராமனின் அம்புகள் இருக்கின்றன ? அவற்றை வாங்க நாம் இருக்கிறோம் ...நமக்கு என்ன குறை?"
----------------------------------------------------------
'காலினின் கருங் கடல் கடந்த காற்றது
போல்வன குரங்கு உள; சீதை போகிலள்;
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன
கோல் உள; யாம் உளேம்; குறை உண்டாகுமோ?
----------------------------------------------------------
காலினின் = காலால் உந்தி
கருங் கடல் = கரிய கடலை
கடந்த = கடந்த, தாண்டி வந்த
காற்றது போல்வன = காற்றைப் போன்ற
குரங்கு உள = குரங்கு (அனுமன்) உள்ளான்
சீதை போகிலள் = சிறை விட்டுப் போகாத சீதை நம்மிடம் இருக்கிறாள்
வாலியை = வாலியை
உரம் கிழித்து = வலிமையை கிழித்து
ஏக வல்லன = போக வல்ல
கோல் உள; = அம்புகள் உள்ளன (இராமனிடம்)
யாம் உளேம்; = அவற்றை மார்பில் வாங்க நாம் இருக்கிறோம்
குறை உண்டாகுமோ? = நமக்கு வேறு குறை என்ன இருக்கிறது ?
கிண்டலு ?...

கிண்டல்தான். ஆனால் ராவணன் எந்தப் பேச்சுக்கும் கேட்கவில்லையே!
ReplyDeleteஇராவணன் அப்படி கேட்காமல் இருந்ததற்கும் காரணம் சொல்கிறான்....that will be in another blog entry...
DeleteYour site is great. I am enjoying each and every poem you have published. Keep-up the good work.
ReplyDelete