கந்தரனுபூதி - நினைந்திலையோ
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அறிவியலின் தாக்கம் நமக்குள் நாளும் வளர்ந்து கொண்டேதான் போகிறது.
எவ்வளவுதான் நம்பிக்கை இருந்தாலும், மனதின் எங்கோ ஒரு மூலையில், இது சரிதானா, இது உண்மையா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.
சரி, உண்மை என்பதை எப்போது உறுதிப்படுத்தலாம்? சரியான ஆதாரம் இருந்தால் இந்த சந்தேகங்கள் போய் விடும். ஆதாரத்துக்கு எங்கே போவது?
எந்த சோதனைச் சாலையில் சென்று அந்த ஆதாரங்களை சரி பார்ப்பது?
சரி ஆதாரம் இல்லை. எனவே இதை எல்லாம் புறம் தள்ளி விடலாம் என்றால் அதற்கும் மனம் ஒப்ப மறுக்கிறது.
இதற்கு என்னதான் முடிவு? இப்படியே வாழ்நாள் முழுவதும் ஒரு முடிவும் இல்லாமல் தவித்துக் கொண்டே இருக்கத் தான் வேண்டுமா?
ஒரு வழி இருக்கிறது.
இறைவனாக இரங்கி, "சரி போடா...ரொம்ப அலைஞ்சு திரிஞ்சு துன்பப் பட்டுவிட்டாய்" என்று அருள் செய்தால் பின் ஆதாரம் ஒன்றும் வேண்டாம். அந்த அருள் ஒன்றே போதும். அதுதான் ஆதாரம்.
அருணகிரி சொல்கிறார், "ஆதாரம் இல்லேன், அருளை பெற நீயும் என் மேல் இரக்கம் காட்ட மறுக்கிறாய்...நான் என்ன செய்வது"
அவன் நமக்கு அருள் செய்யாவிட்டால் என்ன. நமக்கு முன்னால் யாருக்காவது அருள் செய்து இருப்பானே. அப்படி அருள் பெற்றவர்கள் ஏதாவது எழுதி வைத்து இருப்பார்களே. அதைப் படித்து தெரிந்து கொள்ள முடியாதா?
ஆன்மீக அறிவு சார்ந்த நூல்களை நான்கு படிகளாக பிரிக்கிறார்கள்.
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் என்று.
இந்த நூலகளைப் படித்து ஞானம் பெற்று உண்மை எது என்று அறிந்து கொள்ள முடியுமா?
அருணகிரி சொல்கிறார், "...உண்மை, இறை என்பதெல்லாம் அறிவிற்குள் அடங்காத ஒன்று" என்று.
அது என்ன அறிவிற்கு அகப்படாத ஒன்று இருக்கிறதா? வினோதமாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் நினைப்பது மிகவும் சரி என்கிறார் அருணகிரி. "விநோதமானவன்" என்கிறார்.
பாடல்
ஆதாரமிலேன் அருளைப் பெறவே
நீதானொரு சற்று நினைந்திலையோ
வேதாகம ஞான வினோதமனோ
தீதா சுரலோக சிகாமணியே
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/04/blog-post_29.html
(pl click the above link to continue reading)
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
மெய்யியல் - பகுதி 5
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
மெய்யியல் - பகுதி 6
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html
மெய்யியல் - பகுதி 7
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html
நின்று தயங்குவதே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html
வள்ளி பதம் பணியும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html
விடுவாய் வினையா வையுமே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html
பரிசென் றொழிவேன்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html
எதிரப் படுவாய்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_8.html
முருகன் கழல் பெற்று உய்வாய்
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_14.html
என்று அருள்வாய் ?
பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html
யாமோதிய கல்வியும் பாகம் 2
https://interestingtamilpoems.blogspot.com/2023/01/blog-post_29.html
உதியா மரியா
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post.html
மிடியென் றொரு பாவி
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_12.html
உபதேசம் உணர்தியவா
https://interestingtamilpoems.blogspot.com/2023/02/blog-post_18.html
கருதா மறவா
வள்ளிபதம் பணியும்
https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_4.html
அடியைக் குறியா
https://interestingtamilpoems.blogspot.com/2023/03/blog-post_21.html
அருள் சேரவும் எண்ணுமதோ
]
No comments:
Post a Comment