Tuesday, August 26, 2014

சிவ புராணம் - பொய்யாயின போய் அகல வந்து அருளி - பாகம் 2

சிவ புராணம் - பொய்யாயின  போய் அகல வந்து அருளி - பாகம் 2

பாடல்

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெப்பமாய் இருப்பவனே. குளிர்ச்சியாய் இருப்பவனே. நியமங்கள் என்ற மலம் (அழுக்கு, குற்றம்) இல்லாதவனே. என்னை விட்டு பொய்யாயின போய் விட அருள்  .செய்தவனே.  எனக்கு ஒரு ஞானமும் இல்லாத எனக்கு அஞ்ஞானத்தை போக்கி நல்ல அறிவை கொடுத்தவனே


பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி


பொய்யாயின எல்லாம் எப்படி போகும் ? 

மணிவாசகர் சொல்கிறார் - அவனே "வந்து அருளினான்" என்று.

இறைவன் யார், அவன் எப்படி இருப்பான், கறுப்பா சிவப்பா, உயரமா குட்டையா என்று நமக்குத் தெரியாது. பின் எப்படி இறைவனை தேடிக் கண்டு அடைவது. 

நமக்கு அவனைத் தெரியாது. அவனுக்கு நம்மைத் தெரியும் அல்லவா ? 

அவனே வந்து அருள் செய்ததனால் பொய்யாயினவெல்லாம் போயிற்று. 

இதையே சொல்ல வந்த அருணகிரி நாதரும் 

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"  என்றார்.


"அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே"

ஒளி வந்தால் இருள் தானே விலகும். நல்லறிவு வந்தால் அஞ்ஞானம் தானே விலகும். அப்படி அஞ்ஞானத்தை விலக்கும் நல்லறிவாக அவன் இருக்கிறான். 

சிவ புராணம் சிந்திக்க சிந்திக்க விரியும். 













2 comments:

  1. இதெல்லாம் சொல்வதர்க்குச் சில அடிப்படையான assumptions இருக்கின்றன:

    கடவுள் இருக்கிறார்.
    கடவுளை உணர்வதே உண்மை; மற்றெல்லாம் பொய்.
    கடவுள் வந்து நமக்கு அந்த உண்மையை உணர்விக்க முடியும்.

    இதெல்லாம் மாணிக்க வாசகர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஒப்புக் கொண்டால் ஒழிய, இந்த மாதிரிப் பாடல்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

    சில பக்திப் பாடல்களில் நிறைந்திருக்கும் மனித உணர்சிகளை என்னால் அனுபவிக்க முடிகிறது; சும்மா கடவுள் வந்து வழி காட்டினார் என்பது போன்ற பாடல்களுடன் என்னால் ஓட்ட முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதற்கான தன்மை இருந்ததால் தான் அவர் மாணிக்க வாசகர்..நாம் வாசிப்பர்

      Delete