Thursday, April 12, 2012

கம்ப இராமாயணம் - வாலியின் சகோதர பாசம் - 2






வாலிக்குத் தெரியும் than தம்பி சுக்ரீவனைப் பற்றி. தண்ணி அடித்துவிட்டு oruvelai ஏதாவது தவறு செய்தாலும் செய்வான், அப்படி செய்தால், எங்கே இராமன் சுக்ரீவன் மேல் kopap பட்டு அவனை தண்டித்து விடுவானோ என்று பயந்து, சுக்ரீவன் மேல் உள்ள வாஞ்சையால் இராமனிடம் ஒரு வரம் கேட்கிறான். அது என்ன வரம் ...?


ஓவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்;
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்' என்றான்

---------------------------------------------------------------------------------------
'ஓவிய உருவ! = ஓவியத்தில் எழுதப்பட்ட உருவம் போல் உள்ளவனே. இராமன் எப்போதும் நிதானம் உள்ளவன். ஓவியத்தில் உள்ள உருவம் எப்போதும் ஒரே  மாதிரி இருக்கும். எனவே ஓவிய உருவ

நாயேன் = நாய் போன்ற சிறியேன்

உளது ஒன்று பெறுவது உன்பால் = உன்னிடம் கேட்டு பெறுவது ஒன்று உள்ளது

பூ இயல் நறவம் மாந்தி = பூவில் உண்டாகும் மதுவை அருந்தி

புந்தி வேறு உற்றபோழ்தில் = புத்தி தடுமாறி, புத்தி வேறு மாதிரி போன சமயத்தில்

தீவினை இயற்றுமேனும் = தீவினை ஏதாவது செய்து விட்டால்

எம்பிமேல் = என் தம்பியின் (சுக்ரீவன்) மேல்

சீறி = கோபப் பட்டு

என்மேல் ஏவிய = என் மேல் ஏவிய

பகழி என்னும் கூற்றினை ஏவல்' என்றான் = அம்பு என்ற கூற்றினை (எமனை) அவன் மேல் ஏவி விடாதே


No comments:

Post a Comment